பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—

ஈரோடு வேலா (வரலாறு)

-

137

ஏற்பட்டால் நாட்டின் மொழி நிலை -சமயநிலை சாதி நிலை அரசியல நிலை குமுகாய நிலை - பொருளியல் நிலை தொழிலியல் நிலை -சட்சியர் நிலை - சான்றோர் நிலை பொது மக்கள் நிலை - கற்றோர் நிலை எப்படி எல்லாம் இருக்கும் இருக்க வேண்டும் என்பதன் வெளிப்பாடே ஆசிரிய உரைகளின் பிழிவு எனல் சாலும்!

பதவியர் எனின் என்ன, ஆளியர் எனின் என்ன, முரணர் எனின் என்ன, 'திரளர்' எனின் என்ன 'அழிப்பர்' எனின் என்ன நெஞ்சிற்படும் உணர்வை உள்நோக்கு ஒன்று இன்றி உணர்த்துதல் உள்ளத்தால் பொய்யா தொழுகுதல் ஆகும். அத்தகையர் இடித் துரைத்தல் பெருநலப் பார்வையது. அதனால், இடுக்கண் வரும் எனினும் நகைப்பதும் இடும்பைக்கு இடும்பை படுப்பதும் இயற்கை! அந்நிலை இல்லாரே, உணர்வு வயத்தல் ஒன்றை உரைத்துப் பின்னர் அவ்வுணர்வு போய நிலையில் என் செய்தோம் என இரங்கி மாற்றாரிடம் மதியாரிடம் மண்டியிட்டுத் தன்மானம் தாழ நின்று வாய்மைக் களத்தில் இருந்து தப்பியோடுவர். வேலா, மடியில் க்னமில்லை; வழியில் அச்சமில்லை" அவர் மன நலம் மன்னுயிர்க்கு ஆககம் தேடுகிறது:

மனவளம்

-

“எங்கும் கழித்தல் (-) எங்கே கூட்டல் (+)

என்பது ஆசிரிய உரைகளுள் ஒன்று (7:12).

1947 - ஆம் ஆகத்துத் திங்கள் பதினைந்தாம் நாள், நம் நாடு உரிமை பெற்றது - இது வரலாறு.

அந்த உரிமை உண்மையானது அன்று என்று காந்தியடி களும் தந்தை பெரியாரும் அன்றே சுட்டினார்களே இதுவும்

வரலாறு.

-

இவ்வரலாறுதான் உண்மை என்று இன்றைய நாட்டு நடப்புகள் தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றன.

நாம் உணவிலே உடையிலே தேவையிலே தொடர்பிலே மற்றவர்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்ற உணர்ச் சியில் குறை காண இயலாது. எங்குப் பார்த்தாலும் தொழிலும் உழவும் வளர்ந்து, முன்னைவிட ஐம்பது விழுக்காடு மிகுதியாக இருப்பதைப் பார்க்கிறோம். இனியும் கட்ட முடியாத அளவுக்கு அணைகளையும் கட்டி விட்டோம்.