பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

வேலாவையும் தமிழ் உணர்வையும் தனித் தனியே பிரித்துக் காண இயலாது. அவ்வகையில் இரண்டற்ற ஒன்றானவர் அவர். பள்ளிப் பருவத்திலேயே உருவாகி, காளைப் பருவத்திலே கட்டமைந்து, திருக்குறள் பற்றால் வளர்ந்து, குறளிய - குறளாயத் தொண்டுகளால் முழுமை பெற்றது அது.

"நீதிமன்றங்களில் தமிழ்" என ஆசிரிய உரை எழுதியதுடன் சில சட்டச் சொற்கள் - தமிழாக்கம் என்னும் ஆக்கத் தொடரை வெளியிட்டவர் வேலா (2:8) தமிழ்க் கல்வி பயில்பவர் களுக்கே எங்கும் எதிலும் முன்னுரிமை" என்னும் கருத்தினை வலியுறுத்தி, முன்னுரிமை தர முதல்வர் முயல்வாரா?" என வினா எழுப்பியவர் வேலா (3:11).

தமிழ்ப் பல்கலைக் கழகம் வெளியிடும் அகர முதலியில் வேறுமொழிச் சொற்கள் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்திக் கருத்தரங்கு நடாத்த, "தமிழ் மொழியின் தனித் தன்மைமையக் காப்பாற்றக் குறளிய அன்பழைப்பு விடுத்து நடத்திக் காட்டியவர் வேலா (6:4).

தூய தமிழ் அகராதியும் தொகுக்கப்படும் என அரசும் பல்கலைக் கழகமும் ஏற்றுக் கொண்ட அளவில் தமிழுக்கு வெற்றி; தமிழுக்கு வந்த இடையூறு நீங்கியது” எனக் களிப்புற்றவர் COQUIT (6:7).

-

"மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டுகோள்" எனப் பத்துக் கருத்துக்களை வலியுறுத்தியவர் வேலா (6:9).

அதில், தமிழ் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகள் கற்றுப் புலமை பெற்றிருந்தாலும் தமிழுணர்வும் தமிழ்ப் பற்றுமிலாரைச் சங்கத் தலைவராக அமைத்தல் கூடாது" என்றும், "தமிழிலும் தமிழ் நாட்டிலும் புகுந்துவிட்ட அயல் வழக்குகளும் அயல் பண்பாடுகளும் தமிழுக்கும் தமிழனுக்கும் உரியன என்று திரித்துக் கூறுபவர்களை இனங்கண்டு விலக்க வேண்டும்" என்றும், எங்கும் தமிழ் என்ற முழக்கத்தோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இதனை வழுவாமற் செயற்படுத்தி முத்தமிழையும் முதன்மைப் படுத்துகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்" என்றும் குரல் எழுப்பியவர் வேலா.

"கல்வியில் மும்மொழிக் கொள்கை முரடானது!