பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தமிழில் பெயரைச் சூட்டு!

தமிழனாய் வாழ்ந்து காட்டு!

தமிழ்நாட்டில் தமிழில் பேசினால் கீழ்ச் சாதியா? வேற்று மொழியில் பேசினால் மேற் சாதியா? தாய்மொழி வழிக்கல்வி பயிலாதவனிடம் நாட்டுப் பற்றும் இராது. தேசியப் பற்றும் வராது! சொந்த வீட்டைக்கொள்ளை அடிப்பவனைப் போலத் தன் சொந்த நாட்டையும் கூறு போடுவான்; அடைவு வைப்பான்; விலைக்குக் கூட விற்று விடுவான்.

தமிழ் வழிக் கல்வியைத் தமிழ்நாட்டில் நடைமுறைப் படுத்த வல்லவர்களே ஆட்சிக் கட்டிலுக்கு உரியவர்கள்; மற்றவர்கள் விலக்கப் பட வேண்டியவர்கள்.