பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

விருப்பாவணம் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

தி.பி. 2017 துலை 10ஆம் நாள் (27-10-86) வேலா விருப்பாவணம் ஒன்று எழுதியுள்ளார். அதனைப் படித்த பதிவாளரும் பதிவு அலுவலகத்தவர்களும் இதுகாறும் தம் அலுவலகம் கண்டறியாத 'தனித்தமிழ் ஆவணம்' அதுவென வியப்புற்றுச் சொல்லறச் சொல்லி மகிழ்ந்தனர்.

திருக்குறள் நம்மறை என்பதை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழும் வேலா எனத் தொடங்கியிருந்தது அது. அசையும் அசையாப் பொருள் (தாவர சங்கமம்)மரபுரிமை (பரம்பரை) உரிமை (சுதந்திரம்) துய்த்தல் (அனுபவிப்பு) இளவல் (மைனர்) தம்வரைவு (சுவஸ்தலிகிதம்) இன்னபல இன்றமிழ் ஆட்சிகள் கொண்டது அது. நல்லதமிழில் பதிய, பதிவகம் மறுப்ப தில்லையே! நாம்தானே அதனை மேற்கொள்வில்லை என்பது வேலாவின் தெளிவு!

பெரியார் மாவட்டம்

ஈரோடு மாவட்டம் தனியே பிரிக்கப்பட்டபோது "பெரியார் ஈ.வே. இராமசாமி மாவட்டம்" என்னும் பெயர் சூட்டுவதென் அரசு தீர்மானித்தது. அத்தீர்மானிப்புக்கு முடி வெடுத்தற்கு ஒரு கூட்டம் ஈரோட்டில் நிகழ்ந்தது. அமைச்சர் இராம. வீரப்பனார் வந்திருந்தார். அப்பொழுது அப்பெயர் 'பெரியார் மாவட்டம்' என்றே இருக்க வேண்டும் என வலியுறுத் தினார் வேலா. ஆனால் அமைச்சர் அப்பொழுது அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அதனை விடாமல் வேலா வலியுறுத்தி முத்தமிழ்க் காவலர் வழியே அரசுக்கு ஓர் அறிக்கை விடுத்தார். அம்முடிவே செம்முடிவு எனப் பின்னர் மாவட்டப் பெயர் அமைந்து விளங்குகின்றது.

பிறந்த நாள் வாழ்த்து

வேலாவின் துணைவியின் உடன்பிறந்தவர் மகனும், அவர், வளர்ப்புப் பிள்ளையுமான செந்தில் தம்பிறந்த நாள் வாழ்த்துப் பெறுவதற்கு வேலாவினிடம் வந்தார். அப்பொழுது அரிய பெரியசெயல் செய்த பெருமக்கள் பிறந்த நாளை வீட்டாரும் நாட்டாரும் கொண்டாடுதல் வழக்கம். நம்மைப் போன்றவர்கள் நம் பிறந்த நாளில் "நான் இன்று முதல் இத்தீயதைத் தள்ளுகிறேன்.