பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு வேலா (வரலாறு)

203

ஈதல், இசைபட வாழ்தல்,ஒப்புரவு, பகுத்துண்ணல், ஒத்தறிதல் முதலியன பண்பாட்டுச் சின்னங்கள்.

ஒருவன், ஒருத்தி ஒழுக்கம், கற்பு, காதல் முதலியன வழிவழிக் குமுகாய உயிர்பாற்றல்கள்.

அரசர், அல்லது ஆட்சியாளர் நாட்டில் (நாட்டு மக்களின்) பணியாளர்களே அவர்கட்குரிய தகுதிகள் நம் மறையா வகுக்கப்படும். இரந்து வாழும் நிலைமை உருவாக்கும் ஆட்சியாளர் அழிக்கப்பட வேண்டும். உழவே உயர் தொழில்.

ஊழ் என்பது உலகின் இயல்பாக இயங்கும் இயற்கையின் இயக்கமே. தலைவிதியே முன்னைப் பிறப்பின் பயனோ அன்று நன்மைகளும் தீமைகளும் தம் செயல்களால் விளைவனவே, மோட்சம் (மேலுலகம்) நரகம் (கீழுலகம்) என்ற கற்பனைச் சிறப்புகளையும், இழிவுகளையும் நம் வாழ்வின் காலத்திலேயே நாம் அடைகிறோம். இவற்றைப் பொருளால், புகழால், மனைவியால், மக்களால் இவ்வுலகில் அடைகிறோம்.

நட்பும், நாணமும், மானமும, குடிமையும், நம்மால் பேணப்படும் நாற்றிசைகள்.

கயவர்கள் ஒறுக்கப் பெற வேண்டியவர்கள் மட்டு மல்லர். கரும்பைப் போல் கசக்கிப் பிழிந்து, கொல்லப் பெற வேண்டியவர்கள்.

நல்ல குடும்பம் நல்ல, வலிவான, ஆற்றல் மிக்க செழுமை யுள்ள குழந்தைகளை நல்கும்.

இல்லப்பயனை ஈனும்.

ன்பத்துப் பாலின்

திருக்குறள் மறை எனக்கொள்வேதர் பிறவிக் கடலை முழுமையாகக் கடப்பர்; இடைக்கண் முரியார்; அரைக் கிணற்றுள் விழுந்து அல்லல் அடையார்.

1-2-90

-

வேலா