பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

1984 ஆம் ஆண்டு.

குறளாயப் பொழிவுக்காக ஈரோடு சென்றிருந்தேன்.

ஈரோட்டில் இப்பொழுது உள்ளதுபோல் எனக்குத் தொடர்பு இல்லாத காலம் அது. அடுத்துள்ள பவானியில் என் ளந்தைப் பருவ நண்பர் பாவலர் பொதிகைச் செல்வர் விழாவொன்றுக்கு அழைக்கப் பங்காற்றியுள்ளேன். குறளாய வேலா அவர்களையே சேலம் விழாவொன்றிலேயே முதற்கண் சந்தித்திருக்கிறேன். இந்நிலையில் ஈரோட்டில் என்னை அறிந்தாரும், நான் அறிந்தாரும் அரியர்.

குறளாயக் கூட்டத்திற்கு வந்த யான், நேரே நிகழ்ச்சிக்கே போக வாய்த்தது. வேலா இருந்து வரவேற்றார். மேடைக்கு முன்னே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு பெரியவர் பொன் நிறத்தவர்; தூய வெள்ளைக் கைந்நூலாடை சட்டை, மடிப்புக் குலையாத் துண்டு அணிந்த கோலத்தராய் மென்னடையில், புன்முறுவல் தவழ வந்தார். அவர் வருகையைக் கண்ட அளவில் வேலா முன்னுற நடந்து, வணக்கமிட்டு அழைத்து வந்தார். என்னருகில் வந்ததும் அப்பெரியவர்க்கு என்னை அறிமுகம் செய்து வைத்துவிட்டு, "இவர்கள் ஈரோட்டு முதன்மை மகனார் என வழங்கப்படுபவர்; திருக்குறள் ஆர்வலர்; குப்பு முத்து ஐயா என்பது பெயர்" என்றார்.

"மொய்த்துவளர் பேரழகு மூத்த வடிவென்கோ என்ற சேக்கிழார் அடிகள் வாக்கு. இத்தகைய பெருமகனார் ஒருவரைக் கண்ட பெருமையில் இருந்து வெளிப்பட்டதாகத் தான் இருக்க வேண்டும்" என என்னுள் எண்ணினேன். அடுத் திருந்த நாற்காலியிலே அவர் அமர்ந்தார். நானும் அமர்ந்தேன்.

"இந்தக் கூட்டங்களாலும், இந்தப் பேச்சாலும் என்ன பயன்? வழக்கமாகக் கேட்பவர்கள் 40, 50 பேர்கள் கேட்க, ஒருவர் ஆராய்ச்சி என்னும் பெயரால் சிலவற்றைச் சொல்ல, கூட்டம்