பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

விரைந்து சென்று ஒரு மானை வீழ்த்தினான்.

உடன் வந்தவர்கள் வேறு வேறு பக்கங்களில் போயிருந்த தால் தானே எரியூட்டி, மானை வாட்டினான்.

அதனை எடுத்துக்கொண்டு வந்த பெரியவரையும் அவருடன் வந்தவரையும் பசிதீர உண்ணச் செய்தான்.

அருகிலே இருந்த அருவியைச் சுட்டிக்காட்டி நீர் பருகச் செய்தான்.

பசியும் களைப்பும் நீங்கிய முதியவர் தம் சுற்றத்தினருடன் வழி நடையைத் தொடங்கக் கருதினார்.

எதிர்பாராமல் எதிரே வந்து பசித்துயர் மாற்றிய இளைஞனின் உதவிக்கு நன்றி கூறக் கருதினார்.

அவர் குறிப்பை உணர்ந்த இளைஞன் அவர் நன்றியு ரையைக் கருதாதவனாய், 'பெரியவரே காட்டிலே இருக்கும் என்னிடம் சிறந்த அணிகலம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லி மார்பில் கிடந்த முத்து மாலையையும் கையில் கிடந்த கடகத்தையும் கழற்றித் தந்தான்.

இளைஞன் செயல் பெரியவருக்கு வியப்பில்மேல் வியப்பு ஆகியது. இப்படி உதவும் இவன் யாவன் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என விரும்பினார் "நின்நாடு எது? நின் பெயர் என்ன?" என்றார் பெரியவர்.

ஆனால் அவர் விருப்பத்திற்கு இடமில்லா வகையில், "பெரியவரே நீர் செல்லவேண்டிய வழி இதுவே" எனக் கைகாட்டி விட்டுக் காட்டுக்குள் சென்று, தன் தோழர் கூட்டத்தொடு சேர்ந்து விட்டான் அவன். பெரியவர்க்கு அவ்விளைஞன் யாவன் என்பதில் இருந்த ஆர்வம் பெருகியது! வழியில் போகின்றவர் வருகின்றவர் ஆகியவர்களிடம் அவ்விளைஞன் யாவன் யாவன் என்று கேட்டு அவன் தோட்டி மலைத் தலைவன் நள்ளி என்பதை அறிந்து கொண்டார்.

"நின் நாடு எது? நின் பெயர் எது? என்று கேட்டும் கூடத்தன்னைக் காட்டிக் கொள்ளாமல் உதவும் உயர்ந்த வள்ளல் தன்மையனாக இவன் இருக்கின்றானே! இப்படி இருப்பார் அரியர்! மிக அரியர்!" என வியந்தார். தம் வியப்பைத் தம் அளவில் நிறுத்தி விடாமல் தமிழ் உலகம் கடந்த ஈராயிரம்