பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இளங்குமரனார் தமிழ்வளம் – 28

காந்தியடிகளின் ன்னா செய்யாமை (அகிம்சை)க் கொள் கைக்குப் பட்டு உடுத்தல் மாறானது என்பதும் தொண்டர் களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

'பட்டு' என்பதே அதனைத் தந்த புழு 'பட்டுவிட்டதால்'- இறந்து விட்டதால்-பெற்ற பெயராம், பல்லாயிரம் புழுக்களைச் சாகடித்து அதன் நூலைக் கொண்டு செய்யப்பட்ட பளபளப்பு ஆடை 'கலை'யாடையன்று; 'கொலை'யாடை என்பதை உணர்ந்த உணர்வே அவ்வகைத் திருமணங்கள் நிகழ அடிப்படை ஆயிற்றாம்.

கைந்நூலாடைத் திருமணம் செய்ய முத்து மட்டுமே முடிவு செய்திருக்க முடியுமா? அருமைத் தந்தையார் நல்லண்ணரின் நல்லெண்ணமும் இருந்திருக்க வேண்டுமே! அவர்க்குப் பெண் கொடுத்த குடும்பத்தவர் இசைவும் இருந்திருக்க வேண்டுமே! ஆதலால், இருவீட்டாரும் இயல்பாக ஏற்றுக் கொண்ட இனிய முறை ஆகியது அத்திருமண முறை

பழந்தமிழ் நாட்டுத் திருமண முறை நம் பழைய நூல் களிலேயே இடம் பெற்றுள்ளது (அகநானூறு 86, 136)

முழுமதி ஒளி செய்யும் நாளில் (முழுத்த நாளில்) இரவுப் பொழுதில் திருமணம் நிகழ்ந்துள்ளது.

திருமணப் பந்தல் மணல் பரப்பப் பட்டு, இலைதழை பூத்தொங்கல் வனப்புச் செய்யப்பட்டது.

ஒளி விளக்கு ஏற்றப்பட்டது.

மங்கல மகளிர் புதுக் குடங்களில் நீர் எடுத்து வந்து மணமக்களை நீராடச் செய்து, புத்துடை அணிய வைத்துள்ளனர்.

பொதுச் சடங்குகள் செய்து செய்து பழகிப் போனவர் களும் மக்களைப் பெற்றவர்களுமாகிய மகளிர் நால்வர் திருமணச் சடங்கு நடத்தினர்.

"கற்பினின் வழாஅ. நற்பல உதவிப்

பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு.

என்று அப் பெண்களே மணமகளை நோக்கி வாழ்த்து உரைத் துள்ளனர்.