பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254

முதியோர் இல்லம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

ஓர் ஒதுக்குப்புறத்தில் முதியோர் இல்லம் ஒன்று நடந்து வருவதை அறிந்தார் முத்து. வண்டியும் செல்வதற்கு உரிய வாய்த்த வழியில்லாத அவ்விடத்திற்குத் தம் வண்டியை எட்டத் திலேயே நிறுத்திவிட்டு எட்டு வைத்து நடந்தார். "பெரியவர் யார்? எதற்கு வருகிறார்? இவரைப் பார்த்தால் இல்லத்தில் சேர வருபவராகவும் இல்லை என்று திகைப்படைய இல்லத்திற்குள் சென்று பேசினார். ஆங்கிருந்த முதியவர்களோடு உரையாடினார். விடை பெற்றுக் கொண்டு வரும் போது ஓராயிரம் ரூபாய் இல்லத்திற்குக் கொடையாக வழங்கினார். அது மட்டும் இல்லை. 20000 அளவில் ஒரு கட்டடமும் கட்டித் தந்தார்.

“அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று”

என்பார் திருவள்ளுவர்.

வாய்ப்பு அற்றவர்க்கு உதவுவதே ஒருவர் செல்வத்தைப் பெற்ற பயனாகும். அந்நிலையிலும் உதவாதவர் செல்வம், எல்லாவகை நலங்களும் ஒருங்கே அமைந்த நங்கை ஒருத்தியை வாழத்தக்க நம்பியைத் தேர்ந்து கொடை புரியாத முறையால் அவள் வாழா வெட்டியாக இருக்கச் செய்யும் பெற்றோர் உற்றார் உறவினர் செயல் போன்றது ஆகும் என்பது இக்குறளின் விளக்கமாம்.

பொருட் பொருள் வாழ்வுப் பொருளாகப் பயன்பட வேண்டும். பயன்படுத்தப்பட வேண்டும் என்பன இவ்வள்ளுவ உட்பொருளாம். இதனை எள்ளளவும் குறையாமல் அறிந்து தம் வாழ்வை அமைத்துக் கொண்ட பெருந்தகை குப்பு முத்து எனின் பொருந்திய முடிவேயாம்.

முதியோர் இல்லத்தைப் போற்றும் முத்துவின் சீர்மைக்கு ஒரு சான்று. அவர்தம் பேரனார் விக்கினராசா என்பார். அவர்தம் பிறந்த நாள் விழா ஒவ்வொன்றும் அம்முதியோர் இல்லத்தில் தான் கொண்டாடப்படுகின்றது. எப்படி? இல்லத்தில் உறையும் முதியவர் நூற்றுவர்க்கும் மேற்பட்டோர். அவர்கள் அனைவர்க்கும் அன்று மூவேளை உணவுச் செலவும் பேரனார் கொடையாகத் திகழ்ந்து அவர்களின் ஒருமித்த வாழ்த்தைப் பெறுதற்குரிய ஏற்பாடாகும் இது. இதனைத்தம் மகனாரும்