பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா

255

மருமகளாருமே பெரிதும் விரும்பித் தாமே முன்னின்று செய்தலை நெஞ்சார்ந்த அன்பால் பாராட்டுகின்றார் முத்து. பலப்பலரும் திருமண விழா, பிறந்த நாள் விழா ஆகிய இத்தகைய நேரங்களில் இவ்வாறு விருந்தோம்பிப் பெரு மூதாளர் வாழ்த்தைப் பெறலாமே எனத் தூண்டுகிறார். ஆம்! அறம் வளர்க்கும் அண்ணல் செயல் ஈதென அகம் உவப்பாகின்றது!

ஒரே ஒரு முறை வீடு சென்று கண்டறிந்தவன் யான். பலப்பல மேடைகளிலும் கண்ட காட்சியும் பேசிய பேச்சுமே எங்கள் உறவு. இதனை முன்னுரைப்பகுதி விளக்கமாகக் காட்டும். ஆனால், ஐயா குப்பு முத்து அவர்களின் உளப்பாங்கை நேருக்கு நேர் அறியும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. "ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம்" என்பது போல் உண்மைப் படுத்தும் செய்தி அஃதாம்.

குறளாயப் பொதுச் செயலாளர் பெரும்புலவர் மீ. தங்கவேலனார், குறளாய ஆட்சிக் குழு உறுப்பினர் குமரநடவரச ஈவப்பனார் ஆகியவர்களுடன் ஐயா குப்பு முத்து அவர்களை அவர்கள் இல்லத்தில் காணச் சென்றேன். கட்டட வேலை பார்க்க வந்தவர்களுடன் நின்று உரையாடிக் கொண்டு இருந்தார். நாங்கள் சென்ற அளவில் அவர்களைப் பணிமேல் ஏவிவிட்டு எங்களோடு வந்து அமர்ந்தார்.

குறளியம் குறளாயம் வேலா நிலவுக் கூட்டம் என எங்கள் பேச்சுச் சென்றது. 'திருவள்ளுவர் தவச்சாலை' காவிரித் தென்கரையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் அல்லூரில் யான் ஒரு நிலையம் உருவாக்கி வருவதை உரைத்தேன்.

66

"ஆம்! முன்னரே நாம் பேசி உள்ளோமே! அதன் வேலை முடிந்து விட்டதா? இன்னும் நடந்து வருகிறதா?" என்றார் முத்து.

"முடியும் நிலையை எட்டியுள்ளது. விரைவில் முடிவடையும். அதன் திறப்பு விழாவுக்கு நீங்கள் வருதல் வேண்டும்; வாழ்த்துரை வழங்க வேண்டும்" என்றேன்.

"அவ்வளவு தொலைவுக்கு வருவது எப்படி இருக்குமோ? உறுதி சொல்ல முடியாது. முடிந்தால் வந்து விடுவேன்" என்றார்.

"எப்படியும் நீங்கள் வருதல் வேண்டும். அறிஞர் பேச்சாளர் சிறந்த எழுத்தாளர் என்பவர்களைப் பார்க்கிலும் தவச்சாலைத்