பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகை உயர்த்தும் உயர்வர லாறே!

வாழிய வாய்மை! வாழிய நல்லறம்! வாழிய பொதுநலம்! வாழிய புவியே! 'வாழிய வாழிய' என்று வாழ்த்தினால், வாழிய வாமோ, வாழ்த்துறும் எல்லாம்? வாழ்த்துதல் நோக்கம் வாழ்வுறும் வழிகளைத் தாழ்வறக் கண்டு தலைமேற் கொண்டு செவ்விய செயலில் செய்து காட்டுவதற்கு ஒவ்வும் வகையில் ஓர்ந்து முடித்தலாம்! வாழ்த்துதல் என்பது வாழ்வின் கடைப்பிடி; வாழ்த்துதல் என்பது தாழா முயற்சி; வாழ்த்துதல் என்பது வாய்த்த துணைமை; வாழ்த்துதல் என்பது வாழ்பவர் வாழ்வுதம் வாழ்வெனப் போற்றி வளர்த்திடும் இறைமை! வாழ்த்தத் தக்கதை வாழ்த்தப் பெறாமை தாழ்த்தச் செய்யும் தவறென ஆகும். நல்லதை வாழ்த்த நயந்து வராமை அல்லதைப் பரப்பி ஆவெனத் திறக்க ஆவன செய்யும் அழிசெய லாகும் நல்லதைப் புரிவார் நயவார் தம்புகழ் நல்லதைச் செய்வார் நயவார் விளம்பரம்! நல்லது செய்ததை நான்குபேர் அறிந்து நல்லது செய்தீர் நன்றுநீர் வாழ்கென நவிலக் கேட்பினும் குவிமலர் போலக் கவிழ்முகை யாகிக் காதொடு படாராய்த் தாம் செய்யும் செயலை நாடியே செல்வர்! நாம் செயும் செய்கை நயந்திடல் அன்றோ! ஒடுங்கிரும் ஒதுங்கியும் செல்லும் நல்லவர் அடங்கிய தன்மையால் அடங்கி மறைந்து