பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணநலத் தோன்றல் குப்பு முத்து ஐயா அறிவரா நிலையில் அழிந்தே போன வரலாற் றுண்மை வாய்க்க வழியெதோ? வரலாற்றுயர்வின் வானெனத் திகழ்ந்தும் வரலாற் றியலை வரைந்திடாக் குறையால் வரைந்தும் பரப்பிட வளராக் குறையால் அயலவர் சூழ்ச்சியோ டாக்கிய மறைப்பால் உயர்வெலாம் இழந்தனம்; உய்வெலாம் அற்றனம்; அல்லவை நீங்கி நல்லவை ஓங்க

வேண்டும் என்னின் ஈண்டொன் றுணர்க!

நல்லவை செய்யும் நயத்தவர் புகழைச்

சொல்லிச் சொல்லிச் சுடர்மிகப் பரப்புக! அல்லது செய்யும் அழிவினர் எவரும் வரலாற் றேட்டில் வந்திடா வாறு உரமாய் ஒதுக்கி ஒழிந்தே விடுக! நல்லவை வாழ்வுறின் அல்லவை என்பவை தாமே இறங்கிடும்; தகவுறு தக்கவர்;

வானே யனைய வண்மைச் சுரப்பர்; ஒத்த தறியும் ஒப்புர வாளர்

பத்தரை மாற்றுப் பைம்பொன் பண்பினர் அறிவறி தோன்றலாய் ஆக்கம் புரிபவர் செறிவுறச் செய்யும் செயற்பெரும் செய்கையர் கலைவளம் யாவும் கவின வாழ்பவர் மலையன உறுதி மாறாக் கொள்கையர் இயற்புகழ் பரப்பவை இயல்பாய்க் கொள்க. வள்ளுவ வள்ளல் வாய்மொழி யாகப் பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அது வின்றேல் மண்புக்கு மாய்வது மன்னென் றுரைத்ததும். சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை”யென் றுரைத்ததும் புகழ்நிலை யாளர் புகழ்நிலை வழிகளைப் புகழ்ந்து புகழ்ந்து புகன்று புகன்று பதியப் பதியப் பதியன் பழமெனப் பதிதொறும் நட்டுப் பரப்பிடின் அந்தப் பதியெலாம் பதியும் பதியன் பழமரம்

261