பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பட்டம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 28

1-3-78 இல், மூவாயிரம் சைவ மடங்களின் தலைமை நிலையமாக விளங்கும் கூப்ளி மூடு சாவிரத் திருமடத்துத் தலைவர்நிரஞ்சனசகத்குரு கங்காதரர் பத்தாயிரம் பேர்கள் கூடிய ஒரு பெரு மாநாட்டில் "வீரசைவக் கதிரோன்" எனப் பட்டம் வழங்கிப் பாராட்டினார்.

வீரசைவம் சாதி மத மறுப்புக் கொள்கையினது; இன வேறுபாடு கருதாதது; வேத முறைக்கு எதிர்க்களமானது இக்கொள்கைப் பிடிப்பே வேலாவை ஈர்த்து வீரசைவத் தொண்டில் ஆழ்த்தியது. இக்கொள்கைகளில் ஒருமையுற்றவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார். ஆதலால் அவர் வழியில் தொண்டாற்றும் ஆர்வம் எழுந்தது. திராவிட கழகக் கொள்கை களிலும் இறைமைக் கொள்கை நீங்கலாக எஞ்சியவை ஒத்து வந்தன. ஆதலால், அதனைப் பற்றிக் கருதவும் தலைப்பட்டார் வேலா.தி.க. மாநாடுகளிலும் பங்கு கொண்டார்.

வேலாவின் நாற்பதாம் பிறந்த நாள் விழா 1977 இல் வந்தது. அந்நாளில் தந்தையார் தமக்கென வைத்துப் போன பொருள் அனைத்தையும் கணக்கிட்டார். அவர் வைத்துச் சென்ற தொகை அனைத்தையும் அறசெயல்களுக்கும் பொதுப்பணிகளுக்குமே செலவிடுவது எனத் தீர்மானித்தார். 'அறத்தால் வருவதே இன்பம்' என்பது இல்லற வாழ்க்கையோடு நல்லற வாழ்க்கை குறிப்பது தானே!

தந்தையார் பெயரால் ஈரோட்டில் விளங்கும் உயர் பள்ளிகள் ல்லூரிகள் ஆகியவற்றில் தமிழ்ப்பாடத்தில் முதன்மை பெறுவார்க்குப் பரிசு வழங்கிப் பாராட்டும் வகையில் அறக்கட்டளை ஏற்படுத்தினார். அவ்வறக்கட்டளை வட்டித் தொகை கொண்டு இடையறவு படாமல் தந்தையார்நினைவுப் பரிசு வழங்கச் செய்த ஏற்பாடு,

“தம்மில்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது.”

என்பதை மெய்ப்பிப்பதாம்! தம் உழைப்பையும், உழைப்பால் உயர்வையும், வேலா என்னும் தந்தை பெயருள் இணைத்துக் கொண்ட உணர்வாளர் அல்லரோ வேலா! அதனால் எவ்வெவ்வறச் செயல்களைத் தந்தையார் கொண்டிருந்தாரோ