பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

கெனப்போர்த் தளவாடங்களும் வானூர்திகளும் வழங்கவேண்டும்; இத்திட்டங்களுக்குப் பிரிட்டன் உதவாவிடில், அதற்கு முன்னைய எந்த ஒப்பந்தமும் நிலைபெறமாட்டா" இவ்வாறு எகிப்து வலியுறுத்தியது.

புரட்சியின் விளைவாக எகிப்து குடியரசாகியது. கர்னல் நாசர் தலைமை ஏற்றார். அவர்தம் முதல் நடவடிக்கையே சூயசுக் கடற்காலைத் தேசியமயமாக்கும் திட்டமாக இருந்தது. பிரிட்டன் இதனை விரும்புமா? எகிப்துக்குச் செய்யும் உதவிகளை உடனே நிறுத்தியது. எத்தகைய கட்டுப்பாடும் விதிக்காமல் உருசியா போர்த் தளவாடங்களும், பொருள்வள வாய்ப்பும் செய்தது.

எகிப்து அசுவான் அணைக்கட்டுத்திட்டத்திற்கு உலகவங்கியில் 500 கோடி வெள்ளி கடன் கேட்டது. அதற்குப் பிரிட்டனும் அமெரிக்காவும் முட்டுக்கட்டை இட்டன. உடனே எகிப்து தன் பார்வையைச் சூயசுப் பக்கம் திரும்பியது. 1956 சூலை 27-இல் கடற்கால் முழு உலகக் கழகத்தாரிடமிருந்து எகிப்தின் தேசிய உடைமை என்று அறிவித்துவிட்டது. ஆம்! தேசிய உணர்வின் அழுத்தமான முத்திரை இது.

"சுதந்திரம் எம்பிறப்புரிமை" என்னும் ஒலி இந்தியாவில் முகிழ்த்தது.அம்முகிழ்ப்பு அன்னியப்பிடியில் இருந்து இந்தியாவை விடுவித்தது. அத்தகு உரிமை உணர்வே எகிப்தின் தன்மானத்தையும் உரிமை வாழ்வையும் காத்தது. வாழ்க உரிமை உணர்வு!