பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

பெயர் பெற்றது. அப்பிளவுக்கு அப்பால் சாக்ரிசு என்னும் ஆறு கடற்காலில் சேர்கிறது. அப்பால் கேதன் அணை உள்ளது. ஆங்குள்ள நீர்ப்பெருக்கால் குன்றுகள் தீவுகளாக மாறின. அத்தீவு களில் பெரியது பாரோ கொலராடோ என்பது.

கேதன் அணை அன்றி மாடன்அணை என்பது ஒன்றும் உண்டு. அது கடற்கால் பணிநிறைவேறிப் பதினாறு ஆண்டுகள் கழிந்தபின் அமைக்கப்பெற்றது. இவ்வமைப்பால் கப்பல் போக்கு வரத்து மட்டும் அன்றி, நீர்ப்பெருக்கமும், அதனால் நிலவளப் பெருக்கமும் ஊற்றெடுக்கத் தொடங்கின.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்னும் வழக்குக்கு இழுக்கும் உண்டோ?" என்று தாயுமானவர் வினாவினார்.வல்லவர் வகுத்த வாய்க்கால் பொற்சுரங்கமாகப் பொலிவதை இன்று காண்கிறோம்.

“வினையே ஆடவர்க்கு உயிர்”