பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிணி தீர்க்கும் பெருமான்

51

அல்லல் அடைவார் அவலம் போக்குதற்கென்றே ஆண்டவனால் அருளப்பெற்றவர் ஆல்பர்ட். அவர் புகழை நாடவில்லை. ஆனால் புகழ் நிழல்போல் தொடர்ந்தது. 1953இல் அமைதிப் பணிக்காக 'நோபல்' பரிசு கிடைத்தது. 1955இல் பிரிட்டிஷ் அரசியார் 'பெருந்தகைவுடையர்' என்னும் பெருமை தந்து பாராட்டினார். நல்லவர் உள்ளமெல்லாம் கோவில் கொண்டார் சுவைட்சர்! அவர் புகழ் வாழ்வதாக!