பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓ

ஓ: (1) ஓ வென்பது மதகு நீர் தாங்கும் பலகை.

(தொல். எழுத்து. 180. நச்.)

(2) தூம்பிற் கதவு. ஓவுதல், விகாரத்தால் ஓவென நின்றது எனவும் ஆம். (சிலப். 10: 109. அடியார்.)

ஓத்து: (1) ஒப்புடைப் பொருளை ஓரிடத்துள் ஒற்றுமைப் பட வைப்பது. (யா. வி. பாயிரம்.)

(2) ஓத்து வேதம். எழுதப்படாது ஓதப்பட்டே வந்தமை யால் வேதம் ஓத்தெனப்பட்டது. ‘எழுதாக் கிளவி' எனவுங் கூறுவர்.

ஓத ஞானியர்: (ஓதம் -வெள்ளம்)

(திருக்குறள். தண்ட 134) வெள்ளம் போன்ற ஞானப் பெருக்கர். (குறுந்தொகை விளக்கம். 71.)

ஓதி: ஓந்திக்கு ஒரு பெயர். இடைக்குறை விகாரம் அன்று. குறைக்க வேண்டாத வழியும் (ஓதி என) வருதலின்.

(நற்றிணை. 92. அ. நாராயண.)

ஓம்: (1) ஓம் என்ற சொல் ஓம்பு (பாதுகாத்தல்) என்ற சொல்லின் பகுதியாய தமிழே. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 4; 570.)

(2) ஓங்காரம் என்பது எல்லா எழுத்தொலிகட்கும் முத லாய் அகத்தும் புறத்தும் இயற்கையாய் ஒலிக்கும் ஓசை; ஒருவர் தமது காதைக் கையால் அடைத்து நோக்கும் வழி அதன் அகத்தே அஃது ஓவென்று இரைதலையும், புறத்தே கடலினும் அஃது அங்ஙனமே இசைத்தலையும் காணலாம். செயற்கையாக எழும் ஏனை ஓசைகளையெல்லாம் அடக்கி, உட்குடைவாக எப்பொருளைக் காதில் வைத்துக் கேட்பினும் இவ் ஓங்கார ஓசை இயற்கையாக ஒலித்தல் கேட்கப்படும். உலகம் எங்கணும் ஓவாது ஒலிக்கும் இவ்வோசையினால் உந்தப்பட்டே உலகங் களும், உலகத்துள்ள பல்வகை யுடம்புகளும் இயங்குகின்றன. இவ்வோசையானது படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் இயற்றவல்லதொன்றாம். ஓசை இயங்கும்