பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

கடுந்தோட் காவீரன் : தோளின் கடுமையால் எத்தகைய காவையும் ஏந்த வல்ல வீரன். (குறுந்தொகை விளக்கம் 69.)

கடுவன்: “குரங்கின் ஏற்றினைக் கடுவன்” என்ற மரபியல் வரிக்கு உரை கூறுங்கால் பேராசிரியர், கடுவன் ஆண் குரங் கென்றும் இதனைக் கடியலாகா தெனப்பட்ட இழுக்கென்னை எனின் மக்கட்கும் வெருகிற்கும் அக்காலத்துப் பயின்றன போலுமாகலின்' என்று எழுதினார். கடுவன் என்ற பெயர் சங்க காலத்தில் புலவர்களுக்குக் கூட வழங்கியது. இக் காலத்தில் ஆண்பூனைக்கு வழங்குகின்றது. கடுவன் பூனை என்று பெரிய வளர்ந்த அச்சம் தரும் பூனைக்குத்தான் பெரும் பாலும் இக் காலத்தில் வழங்குவர். கண்டாம் புலி என்றும் கண்டாம் பூனை என்றும் அழைப்பர். சங்க காலத்தில் மனிதருக்கு அவர்களின் கடுமையான பார்வையாலும் தோற்றத்தாலும் வழங்கி இருக்க லாம் எனத் தெரிகின்றது. கடுவன் பூனைபோல இருக்கிறான் என்று இன்றும் வழங்குவர். காட்டுப் பூனை என்று பட்டப் பெயரிட்டுக் கூப்பிடுவதுண்டு. கடுமையான தோற்ற முடைய வர்க்கும் திருடர்க்கும் காட்டுப் பூனை என்று பெயர்கள் வழங்கக் காண்கிறோம். ஆதலின் கடுவன் என்ற சங்கநூல் வழக்கும் வெருவரு தோற்றத்தினால் காட்டுப் பூனையை ஒப்பிட்டுக் கூறி வழங்கினதாக இருக்கலாம்.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 223)

கடைக்கணித்தல்: கடைக்கண்ணால் நோக்குதல் (கடைக் கண் - கண்ணினது கடை) இச்சொல் நோக்குவான் உயர்வும், நோக்கப்படுவான் தாழ்வும் விளக்கிக் கொண்டே வருகின்றமை யால் அருளுக்கு உரியவனாக்குதல் என்ற அரும் பொருளையே உடைத்து. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு 2:81. நச்) கடைப்பிடி என்பது கொண்டபொருள் (இறையனார்: 2. நச்.)

கடைப்பிடி:

மறவாமை.

கண்டல்: கண்டல்-கடல் முள்ளிச்செடி. கண்டலைச் செந்தாழை என்றும், கைதையை வெண்டாழை என்றும் கூறு வாரும் உளர். (திருவிளை. வலைவீசின. 48. ந.மு. வே.)

கண்டிகை: தோலிலே மூன்று நிரையாகப் பலநிறத்து மணியை வைத்துத் தைத்துக் கழுத்திற் கட்டுவது. (கலி. 96. நச்) கண்டீர்: கண்டீர் என்றது வினாவொடு சிவணாது நின்ற தோர் அசை. (சீவக. 2626. நச்)