பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப

94

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ாமை.

(2) தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்க மாட்ட (திருக். கண்ணோட்டம். பரி.) கணக்கலை: கணக்கலை என்ற சொல் ஆண்முசுக்களின் திரளையே - கூட்டத்தையே - குறிக்கின்றது. இதுவே குறுந் தொகையில் இனக்கலை என்று அழைக்கப்பட்டது. நாலடியார் ‘கலைக்கணம் என்று அழைத்தது.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 18)

கணநரி: ஊளையிடும் நரியையே சங்க நூல்கள் ‘கணநரி’ எனக் குறிப்பிடுகின்றன. இந்நரிகள் பெரும்பாலும் கூட்டமாகக் காணப்படும். கூட்ட மாக மாறிமாறி ஊளையிடும். கூட்டமாகவே வேட்டையாடுவதும் உண்டு. இம்முறையாகக் கூட்டமாகவே பெரும்பாலும் கண்டதால் சங்க காலத்தில் இந்நரி இனத்தைக் 'கணநரி' என அழைத்தனர் எனத் தெளிவாகின்றது.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 163.)

கணி: (1) “ஆசான் பெருங்கணி" எனவரும் சிலப்பதிகாரத் தொடரில் ‘கணி' என்பது சோதிடனைக் குறிக்கும் சொல். கோள் நிலைகளைக் கணிக்கின்ற காரணத்தால் சோதிடன் கணியன் எனப் பெயர் பெற்றான். (தமிழ் மொழிச் செல்வம். 88.)

(2) (வேங்கைமரம்) வேங்கைமரம் குறிப்பிட்ட நல்ல நாளில் மலரும் ஆதலின், அந் நன்னாளில் தலைவன் வரைந்து கொள்வதற்கு ஏற்பாடு நடைபெறும். குறித்த நன்னாளில் மலர்ந்து ஒரு கோள்நூல் வல்லான் போல் திகழ்தலால் வேங்கையைக் ‘கணி’ எனவுங் கூறுப.“பன்னாளு நின்ற விடத்துங் கணி வேங்கை நன்னாளே நாடி மலர்தலால்" (பழமொழி. 120) “மன்ற வேங்கை மணநாட் பூத்த” (அகநா. 2) என்பவை இங்கு நினைவுகூரற் பாலன. (கலி. 37. உரைவிளக்கம். இளவழ.)

6

கணியன்: கணியன் கணக்கு வல்ல புலவன்; இவனே கE எனவும் பெயர் பெறுவான். “விளைவெல்லாம் கண்ணி யுரைப் பான் கணி" என்பது புறப்பொருள் வெண்பாமாலை. பூங் குன்றத்தில் இருந்த புலவர் பெருமான் பின்வருவன வெல்லாம் கண்ணி உரைக்கும் பெருமையுடைமையால் கணியன் பூங் குன்றன் என்னப் பெயர் பெற்றார்.

(புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 242.) கணையம்: சீப்பு அகப்படக் குறுக்கே போடக்கடவ மரம்.

(சிலப். 15: 215. அரும்பத)