பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

103

காணிக் கடன்: சோழர் காலத்தில் குடிகள் தம் அரசனுக்குச் செலுத்தி வந்த நிலவரி காணிக் கடன் என்று வழங்கப் பெற்றது. (முதற் குலோத்துங்க சோழன். 86.) காத்தல்: காத்தலாவது தன்வினை செய்வாரானும், கள்வ ரானும், பகைவரானும் உயிர்கட்கு வரும் அச்சத்தை நீக்குதல். (திருக்கோ. 312. பேரா.)

காதல்: எல்லாப் பொருளையும் நுகர்தற்குச் செல்லும் (சீவக. 189. நச்)

வேட்கை.

காதை: கதையை உடையது காதை.

(சிலப். பதிகம்: 62 - 3. அடியார்.)

காப்பியம்: (1) பெருங்காப்பியம் என்று ஆசிரியர் அடை சொற் புணர்த்தமையின், காப்பியம் என்பது சிறிதெனப் பெறப் பட்டது. இஃது உய்த்துக் கொண்டுணர்த்தல். இதனைச் சிறு காப்பியம் எனினும் இழுக்காது. கவியால் பாடப் படுவன எல்லாம் காப்பியம் அன்றோ? பொருள் தொடர் நிலையைக் காப்பியம் என்றது என்னை? எனின், சேற்றுள் தோன்றுவன எல்லாம் பங்கயம் எனப் பெயர் பெறுமாயினும் அப்பெயர் தாமரை ஒன்றன் மேற்றே ஆயினவாறு போல இப்பெயர், பொருள் தொடர் நிலைக்கே ஆயிற்று. (தண்டி. 7. சுப். தே.)

உடை

(2) ஒரு மொழியைச் சிதையாது காப்பது காப்பியம். காப்பு இயன்றது காப்பியம். ஓவு இயன்றது ஓவியம். ஒவ்வுதல் (ஒப்புதல்) யது ஓவு என ஆகும். தவ்வுதல் தாவு; கவ்வுதல் காவு என ஆனாற்போல ஓவு அல்லது ஒப்புமை இயன்றது ஓவியம் எனப் பொருள்படும். இலக்கியம், பண்ணியம், இன்னியம் பல்லியம் முதலிய சொற்களும் இவற்றை ஒத்த ஆக்கமுறை கொண்டவை. இலக்கு இயன்றது இலக்கியம். பண்பை அல்லது பண்ணுதல் இயன்றது பண்ணியம் இனிமை இயன்றது இன்னியம்; பல் இசை இயந்தது பல்லியம் ஆமாறு காண்க.

(முதற் குறள் உவமை. 101.)

(3) ஒரு மொழியின் மரபு வழாமல் காப்பதே அதன் (இலக்கணத்தின்) கடன் எனக் கொண்டனர் தமிழர். காப்பு நூல் என்று அதற்குப் பெயரிட்டனர். காப்பு இயன்றது காப்பியம் என்றனர். தமிழர் நூல்கள் இலக்கியம் காப்பியம் என இருவேறு வகையின. இலக்கு இயன்றது வாழ்க்கையின் இலக்கு அல்லது கலைகளின் இலக்கு இயன்றது - இவற்றின் இயல்பை உணர்த்து வது இலக்கியம். மொழியின் காப்பு இயன்றது காப்பியம்

·