பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

115

கூ:

கூ

கூ என்பது வகரவுகரம் விரியப் பெற்று கூவு, கூவுதல், கூவல், கூவி, கூவ, கூவின முதலியவாயும், யகர மெய் விரியப் பெற்றுக் கூய், கூயின முதலியனவாயும் வரும். கூய் என்பதனைக் கூவி என்பதன் விகாரம் என்பாரும் உளர். அன்றிக் கூப்பிடல், கூப்பிடு, கூப்பிட்டு, கூப்பிட முதலியனவாயும் வரும். “திருத்தம் பயிலுஞ் சுனைகுடைந் தாடிச் சிலம் பெதிர் கூய்" (திருக்கோவை) கூ என்பதினின்று கூகை. கூத்து, கூப்பீடு, கூவிடை முதலிய பெயர்கள் பிறக்கும். கூவிடை கூப்பீடு. "ஐயிரண்டமைந்த, கூவிடைப் பொழிற்கப் புறங் கழிந்தபின்" (இராமாயணம்).

கூடம்: கோட்டத்தை.

(செந்தமிழ். 11: 113.)

கூடம் என்றது மன்றாகச் செய்யப்பட்ட தேவ (திருக்கோ. 129. பேரா.)

கூடல்'

கூடல்: புலவர்கள் கூட்டத்துக்குக் 'கூடல்' என்றும் ஒரு பெயருண்டு. அதனால், சங்கம் இருந்த மதுரைக்குக் என்பதே பெயராயிற்று. தேன் போன்ற தமிழை அங்கே ஆராய்ந்து வந்தமையால் அந்த இடம் டம் மதுரை என்னும் பெயருக்கும் உரியதாயிற்று. இனிமையான ஊர்’ என்பது அதன் கருத்து. (சங்க நூற் கட்டுரைகள் 1 : 2)

66

கூடாரம்: கூடகாரம்; நெற் கூடுகள்.

(சீவக. 2328.நச்)

கூடு: குச்சியும் கோலும் இணைத்து நாரிற் பின்னியாக்கப் பட்டது புட் கூடு. என்பினை நரம்பிற் பின்னி யாக்கப்பட்ட யாக்கையும் கூடு. (திருக்குறள். தண்டி. 338)

கூர்தல்: உடல் வாயிலாக உயிர் பெற்றுவரும் விளக்கம் (வளர்ச்சி) உள்ளது சிறத்தல் என்பது. உள்ளது சிறத்தலைக் கூர்தல் என்பர் தொல்காப்பியனார். (“கூர்ப்பும் கழிவும் உள்ளது சிறக்கும்”. தொல. உரி. 16.) (திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள். 3.)

கூழை: முடியுள் அகப்படாத தலைமயிர்.

(கலி. 107. விளக்கம். பெருமழை.)