பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ் வளம் - 3 3

கொ

கொச்சகம்: கொச்சகம் என்பது ஒப்பின் ஆகிய பெயர்; என்னை? பல கோடுபட அடுக்கி உடுக்கும் உடையினைக் கொச்சகம் என்ப; அதுபோலச் சிறியவும் பெரியவும் விராய் அடுக்கியும் தம்முள் ஒப்ப அடுக்கியும் செய்யப்படும் பாட்டுக் களைக் கொச்சகம் என்றான்.

(தொல். பொருள். 433, 464. பேரா.)

கொட்டகாரம்: அரசன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்து வருங்கால் அரண்மனை ல்லாத ஊர்களில் தங்குவதற்கு அமைக்கப் பெற்றிருந்த மண்டபங்கள் அந்நாளில் (சோழர் நாளில்) கொட்டகாரங்கள் என்று வழங்கப்பட்டுள்ளன.

(பிற்காலச் சோழர் சரித்திரம் II. 78)

கொட்டில்: நெடுகக் கட்டி ஒரு பக்கத்திலே அடுப்பு எரித்து ஒரு பக்கத்திலே தொழில் ஒழிந்த நாளில் சகடையில் உருளையை யும் கலப்பையையும் சார்த்தி எருதுகளும் கட்டி நிற்றலில் கொட்டில் என்றார். (பெரும்பாண். 189-90 நச்.)

கொடிநிலை: கொடிநிலை என்னும் இருமொழித் தொடரில் கொடி என்பது கிழக்குத் திசையினை உணர்த்துதல்,

“பொய்தீர் உலகம் எடுத்த கொடிமிசை

மையறு மண்டிலம் வேட்டனல்’

(கலித்தொகை. 141)

என்று உரைகாரர் நச்சினார்க்கினியர் ஆண்டெடுத்துக் காட்டிய செய்யுளால் நன்கு விளங்கும். விளங்கவே, கீழ்த்திசைக் கண்ணே வந்து நிற்கும் கதிரொளியை அஃதுணர்த்துதல் புலனாம்.

(செந்தமிழ்ச் செல்வி சிலம்பு 5 79)

கொடிப்பிணையல்: நீளிதாகப் புனையும் ஒரு மாலை வகை. (ஐங்குறு. 91. விளக்கம். பெருமழை.)

கொடிறு: குறடு என்று வழங்குவது. (பற்றுக்குறடு என்பதும்

அது)

(நற்றிணை. 107.அ. நாராயண.)