பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

சி

சிமிழ்த்தல்: சிமிழ்த்தல் என்றது அவன் வாய்மேல் விரல் எற்றி அதுபட விளித்தல். (திருக். 274. காலிங்) சிரந்தை: சிரந்தை துடி. சிரற்பறவையின் சிறகு அசை வதுபோலத் துடி கொட்டுமிடத்துக் கைவிரல்கள் அசைய விளங்கும் இசைநலம் தோன்றத் துடி, சிரந்தை எனப் பெற்றது. (பதிற்றுப்பத்து கடவுள் வாழ்த்து. ஔவை. சு. து.) சிலம்பு: சிலம்பு என்றது வெற்பின் ஒருபக்கத்து உளதாகிய சிறு குவட்டை. (திருக்கோ. 99. பேரா)

சிவம்: சிவம் என்ற சொல் செம்மை அடியாகப் பிறந்தது. செம்மை என்பது நன்மை, நேர்மை, சிறப்பு, மங்கலம், சுகம் என்கின்ற பண்பினையும் செந்நிறம் என்ற நிறத்தையும் குறிக்கும் ஒரு சொல். செந்நிறம் என்ற பொருளில் அச்சொல் வழங்குமிடத்து அதினின்று 'சிவ' என்ற சொல் எழுந்து வழங்குதல் கண்கள் இரண்டும் சிவந்தன என்பதில் சிவந்தன என்பதன் பகுதியாக அமைதலால் விளங்கும். கடவுளை ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் 'செம்பொருள்' என்றார். செம் பொருள் என்னும் சொற்றொடரின் பொருளே சிவம் என்பதற்கும் கொள்ளப்படும்.

(செந்தமிழ்ச் செல்வி சிலம்பு. 2. 59.60)

சிவன்: சிவன் என்னும் சொல் முருகப்பிரான் பெயராகப் பண்டைத் தொல்காப்பிய நூலுள் ஓதப்பட்ட சேயோன் என்னும் சொல்லின் திரிபே ஆகும்.

-

(தமிழர் மதம். 136.) அரைக்கண்ணால்

சிறங்கணித்தல்: சிறங்கணித்தல் நோக்குதல். “ஒருகண், சிறக்கணித்தாள் போல நகும்” சிறக் கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல் சுருங்குதல் என்றார் பரிமேலழகர்.(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 2-82.) சிறுசிரல்: சிறிய சிச்சிலிக்குருவி. சிச்சிலி - (மீன்கொத்திக் (நாலடி. 395. தருமர்)

(குத்திக்) குருவி.