பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

129

சிறுநோக்கு: சிறியராக நினைத்துப் பார்க்குங் கீழ்நோக்கு. (நாலடி. 298. பதுமனார்.)

சிறுமாவையம்: குதிரையொடு செய்யப்பட்ட சிறுதேர்.

(குறுந்தொகை விளக்கம். 61.)

சிறுமுதுக்குறைவி: சிறிய பிராயத்தே பெரிய அறிவை (சிலப். 16- 68. அடியார்.)

யுடையாள். சினம்: (1) கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது (முருகு. 134- 5. நச்)

சினம்.

(2) கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம். (சிறுபாண். 210. நச்) சினமின்மை: (1) சினம் இன்மையாவது ன்மையாவது சினத்தைக் கருதாமை. யாவன் ஒருவன் தம்மை இழிவாகச் சொன்னவை தம்மாட்டுளவாயின், உண்மை சொன்னான் அதனை விலக்கு வாம் எனவும், அவை இல்லையாயிற் பொய் சொன்னான் நமக்கென் என்றும் மெய்தூர்ந்ததனைத் தாம் முட்டினதோடும், தம் மேல் யாதானும் ஒன்றுபட்டதனோடு வாசியற்றிருத்தலும் ஆகிய சினமின்மைகளைக் கூறப்பட்டது.

(நாலடி. சினமின்மை. பதுமனார்.)

(2) அஃதாவது தம்மை மற்றொருவர் இழிவாகச் சொன்ன இடத்தும் மெய்தூர்ந்து அடித்த இடத்தும் இது நாம் முன்பு செய்த தீவினையால் வந்தது அல்லாமல், தீவினை செய்யாது இருக்கில் இது நமக்கு வருவது அல்ல என்றும் ஒருவர் மெய் தூர்ந்து தடிந்ததனைத் தம்மேல் ஒரு மரம் இடுவதுபோலும், முள்தைத்தல்போலும் கருதி மரத்தினோடும் முள்ளினோடும் வாசியற்றால்போலத் தமக்குப் பொல்லாங்கு செய்தவர் மேலும் கோபம் எழாமல் தம் அறிவினால் அதனை மீட்டல்.

(நாலடி. சினமின்மை. தருமர்.)

சினை: உயிர்ப்பொருளின் உறுப்பு.

(சொல். கட். 52.)