பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

133

சூ

சூத்திரம்: சூத்திரமாவது கருதிய பொருளைக் கைக் காண்டு கண்ணாடியில் நிழல்போலத் தெரிவுறத் தோன்றச் செய்யப்படுவது. (யா. வி. பாயிரம்.)

சூலி: சூலி - கொற்றவை. சூலத்தை உடைமையின் கொற்ற வையைச் சூலி என்றார். (குறுந்தொகை. 218. உ. வே. சா.)

சூழ்ச்சி: (1) சூழ்ச்சி என்பது சுழற்சி; சூழ்வருவானைச் சுழல்வரும் என்ப ஆகலின்... அஃதாவது மனத்தடுமாற்றம்.

(தொல். பொருள். 260. பேரா.)

(2) சூழ்ச்சி என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பழைய பொருள் "சூழ்ந்து நிற்றல்” “ஆராய்தல்' என்பவை. இன்று வழங்கும் பொருள் ‘தீய எண்ணம்’ தீய எண்ணம்' 'வஞ்சக வஞ்சக யோசனை என்பவை. அச்சொல்லின் பிறப்பைக் காட்டும் 'சூழ்' என்னும் அடிச் சொல் தெளிவாக அமைந்திருந்தும் இவ்வாறு பொருள் மாறு வதை தடுக்க இயலவில்லை.

(மு.வ., மொழி வரலாறு. 59.)