பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

135

செம்பு: செம்பு என்பது உலோகங்களில் ஒன்று. செந் நிறமாயிருத்தலின் அஃது அப்பெயர் பெற்றது. அதனால் செய்யப்பட்ட கலனைச் செம்பு என்றே அழைத்தனர்.

(பழந்தமிழ். 69)

செம்பொருள்: செம்பொருள் - அறம். அறமானது மெய் யுணர்ந்தார் நெஞ்சிற் கெல்லாம் செம்மையுடையதாய்த் தோன்றலின். (திருக்குறள். தண்டி. 91.)

காமை.

செம்மாத்தல்: மகிழ்ச்சியால் இறுமாந்திருத்தல்.

(நாலடி. 331. தருமர்)

செம்மை: கருத்தும் சொல்லும் செயலும் தம்முள் மாறா (திருக். 951. பரி.)

செய்: செய், விளைநிலம், இது பொதுப்பெயர். புன்மை சிறுமை ஆதலின், விளைச்சலில் சிறுமையுடைய புலம் ‘புன் செய்’ ஆயிற்று. விளைச்சலில் பெருமையுடையது நன்செய். இதன்கண் நன்மை பெருமைப் பொருளது.

செய்யுளும் பாவும்:

(திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை. 59.)

அறமுதல்நான் கென்றும் அகமுதல் நான்கென்றும் திறனமைந்த செம்மைப் பொருள்மேல் - குறைவின்றிச் செய்யப் படுதலால் செய்யுள் செயிர்தீரப்

பையத்தாம் பாவுதலால் பா.

(யா. வி.55.)

-

செருப்பாழி: மேல்கடற்கரையை அடுத்துள்ள பாழிச் சிலம்பு என்ற மலைக்குச் செருப்பு என்ற பெயரும் உண்டு. செருப்புப் போன்ற தோற்றமுடையதுபோலும். புலவர்கள் அதை ‘மிதியாச்செருப்பு' என்றனர். அம்மலையை அடுத்துள்ள வளைகுடாவுக்கு - செருப்பாழி என்று பெயர். செருப்பு + ஆழி செருப்பாழி. அங்கு, பாழி அல்லது செருப்பாழி என்ற ஊரும் ருந்தது. அது பாதுகாப்பு மிக்க வலிய அரணை உடைய நகராகும். அச் செருப்பாழியில் தங்கியிருந்த மோரியார் படையை வென்று துரத்தியே, இளஞ்சேட் சென்னி என்னும் சோழ மன்னன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்று பெயர் பெற்றான். (கொங்குநாடு. 127.)