பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

147

(12) தமிழ் என்பது இனிமை என்னும் பொருட்டு என்றும் னிமை உடையதாந் தன்மை பற்றித் தமிழ் எனத் தம் மொழிக்குப் பெயரிட்டனர் தமிழர் என்றும் கூறுவர். தம் மொழியாந் தமிழ்மொழியின் இனிமை கண்டு உவந்து இனி மைக்கே தமிழ் எனப் பெயரிட்டனர் எனவே சாலப் பொருத்த முடைத்து. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3:9.)

(13) "தானே தமியள் இங்கெய்திய துரை” “தானே தமியள் நின்றோள்” என்பனவற்றுள் 'தமி' என்பது தனிமைப் பொரு ளில் வழங்கப்பட்டுள்ளமை காண்க. கவி, குமி, அவி, கலி என்பன ஈற்றில் ‘ழ’ கரம் பெற்றுக் கவிழ், குமிழ், அவிழ், கலிழ் என்றாயது போலத் ‘தமி' என்பது தமிழ் என்றாயிற்று. ‘ழ’ கரம் பகுதியைப் பெயர்த் தன்மைப்படுத்த வந்த எழுத்து.

(தமிழ்மொழி வரலாறு. 70 - 71. கவிராசர்.) தமிழின் துறை: தமிழின் துறைகளாவன ஈண்டு அகமும் புறமும் ஆகிய பொருட்கூறு. (திருக்கோ. 20. பேரா.)

தயை: தாய் என்ற சொல்லுடன் தொடர்புடைய தமிழ்ச் சொல்லே தாயாகி நின்ற தண்ணளி குறித்த ‘தயா' என்பது நறா (தேன்) என்ற சொல் நறை, நறவு என வழங்குவது போல் தயா என்பதன் திசை வடிவங்களாகத் தயை தயவு என்ற வடிவங்கள் தோன்றின. (மணிவிளக்கவுரை. 0)

தரவு: தரவு என்ற பொருண்மை என்னை எனின் - முகத்துத் தரப்படுவது என்ப. அதனை எருத்தெனவும் சொல்லுப; என்னை? உடம்பும் தலையும் என வேறுபடுத்து வழங்கும் வழக்கு வகையான் உடம்பிற்கு முதல் எருத்தென்பது ஆகலின்.

(தொல். பொருள். 444. பேரா.)

தவம்: (1) தவமாவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கல் முதலாயின.

(திருக். 19. பரி.)

(2) தபு + அம்: தபம் தவம் கெடுத்தல், நீக்குதல் பற்றறுத்தல். நீத்தார், துறவு என்னுஞ் சொற்களின் பொருளை நோக்குக. தவிர், தவத்து (நீக்கு) என்பன தவம் என்பதோடு தொடர்புடைய சொற்கள். (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 354.)