பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

தவளைப்பாய்த்து: தவளைப்பாய்த்து என்பது, தவளை பாய்கின்றுழி இடைநிலம் கிடப்பப் பாய்வது போலச் சூத்திரம் இடையிட்டுப் போய் இயைபு கொள்வது.

தள்ளாவிளையுள்:

போகாத நிலம்.

(நன். 18. மயிலை.) (இறையனார். 4. நச்ஷ மழையில்லாத காலத்தினும் சாவி (திருக். 731. மணக்.)

தளம்பு: தளம்பு என்றது சேறு குத்தியை. (புறம். 61. ப. உ.) தளை: சீரிரண்டு தட்டு நிற்றலில் (தளைந்து நிற்றலில்) (யா. வி.1.)

தளையே.

தற்றுதல்: (ஆடையை) இறுக உடுத்தல். (திருக். 1023. பரி.) தறுகண்: தறுகண் என்பது, அஞ்சுதக்கன கண்ட இடத்து அஞ்சாமை. (தொல். பொருள். 257. பேரா.)

தனிநிலை: அஃகேநம் தமிழில் தனிநிலை என்று அழைக்கப்படும். இது நெஞ்சில் இருந்து வருங்காற்று இதழாலும், நாவாலும் அடைபடாமல் வெளிப்போவதால் தோன்றும் உயிரெழுத்து அனையதும் அன்று; அக்காற்று அடைபட்டு வெளிப்படுவதால் பிறக்கும் மெய்யெழுத்தைப் போன்றதும் அன்று. இரண்டிற்கும் இடையே உயிருடன் சேராமலும் மெய் யுடன் சாராமலும் தனியே நிற்றலின் தனிநிலை எனப்பட்டது.

(செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 3 - 226)