பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

3

தீ

தீமை: தீ என்பது எதையும் சுட்டெரித்து அழித்தலால் தீமை என்பது கெட்டு ஒழிதலாகிய அழிவை உணர்த்துகிறது. (திருக்குறள் அறம். 80.)

தீனி: ஒரு நாட்டில் உணவு என்பதை ‘தின்தின்' என்றே பெயர் சொல்கிறார்கள். சில உணவுப் பொருள்களைத் தின்னும் போது, ‘தின் தின்' என்ற ஒலி கேட்பதால் பொதுவாக உண வுக்கே, 'தின்தின்' என்று பெயர் வைத்து விட்டார்கள். அந்த நாட்டில் மட்டும் அல்ல, நம் நாட்டிலும் அப்படிப் பெயர் அமைந்திருக்கும் போல் தோன்றுகிறது. நாமும் தமிழில் தின் என்றும் தீனி என்றும் சொல்கிறோம். (சொல்லின் கதை. 8.)