பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

153

து

து: 'து' என்பது யகரம் விரியப் பெற்றுத் துய்த்தல், துய்த்து, துய்க்க முதலியனவாய் வரலன்றித் துவ்வல், துற்றல், துற்று, துற்றிய முதலியனவாயும் வரும். துற்றிய - தின்ற. “துராய் துற்றிய துருவையும்” (பொருந) துற்று என்பது பெயராயும் நிற்கும். துற்று - உணவு. முற்றுற்றுந் துற்றினை (நாலடி) துப்பு, துப்புரவு, துவ்வு, துற்றி முதலிய பெயர்களும் இதினின்று தோன்றும்.

(செந்தமிழ். 11 :120)

துகில்: துகில் என்பது மாதர் அணியும் மெல்லிய ஆடை கடற்கரைக்குத் தன் காதலனாகிய கோவலனோடு சென்ற மாதவி ‘நிறங்கிளர் பூந்துகில் நீர்மையின் உடுத்திருந்தாள்' என்று சிலப்பதிகாரம் குறிக்கின்றது.

தஞ்சை மாவட்டத்திலே துயிலி என்ற ஊர் ஒன்று உண்டு. அவ்வூரில் நெய்யப்படும் மெல்லிய ஆடையும் துயிலி என்றே வழங்குகின்றது. நேர்த்தியான துகில் நெய்யப்பட்டதனால் அவ்வூர் துகிலி என்ற பெயர் பெற்று, அப் பெயர் நாளடைவில் துயிலி என்று மருவியதோ என்பது ஆராய்தற்குரியதாம்.

(தமிழகம் அலையும் கலையும். 175.) (திருக்கோ. 132. பேரா.)

துண்டம்: ஒரு பொருளினது கூறு.

துணி: துணித்தான் துணிந்தான் இவை இரண்டும் ‘துணி’ என்ற ஒரே முன்னிலையாற் பிறந்து பொருள் வேற்றுமை உடையனவாய் வழங்கி வருதல் தெளிவாகிறது. இவற்றுக்குள்ள வேற்றுமை, காணப்படும் நிகழ்ச்சிக்கும் காணப்படா நிகழ்ச் சிக்கும் உள்ள வேற்றுமையே அன்றி வேறன்று. துணி வெட்டு. துணித்தான்: வெட்டினான், அஃதாவது ஒன்றை மற்றொன்றி னின்றும் பிரித்தான். (துணி என்பது பெயராயின் துணிக்கப் பட்டதைக் குறிக்கும்; துண்டு என்பதற்கும் பொருள் அதுவே) துணிந்தான்: உள்ளத்தால் ஒன்றை மற்றவற்றினின்றும் பிரித்து உணர்ந்தான். அல்லது எண்ணங்கள் பலவற்றால் எழும் ஐயங் களை அறுத்து முடிபிற்கு வந்தான். இவண் வெட்டுதல் என்று புறத்தொழில் அகத்தின் மேல் ஏற்றப்பட்டது. துணிந்தான் என்பதே இவ்விரண்டில் முந்தியது; அஃது அகத்தில் நிகழும்