பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

தொ

தொடர்பு: தொடர்பு என்பது தொழிற்பெயர். தொடர் என்பது பகுதி. ‘பு' என்பது தொழிற்பெயர் விகுதி. தொடர் என்னும் பகுதியில் இருந்து தொடர்வு, தொடர்ச்சி, தொடர்தல், தொடர்ப்பாடு என்னும் தொழிற்பெயர்களும் வந்தன. அவை எல்லாம் ஒரு பொருளைக் குறிப்பனவாகும். தொடர்பு என்பது பின்போதல், பிடித்தல், பற்றுதல், சேர்தல், தழுவுதல், கலத்தல் என்னும் கருத்துக்களை உணர்த்துகின்றன. இக்கருத்துக்கள் முறையே ஒன்றன்பின் ஒன்று, இருபொருள்களுக்குமுள்ள நெருக்கத்தை அதிகமாய்க் காட்டுகின்றன. பகுதி மாத்திரையாய் நிற்கும் தொடர் என்னும் முதனிலைமொழி ஆகுபெயரான ஒன்றனை ஒன்று பற்றியிருக்கிற பல வளையங்களால் ஆகிய சங்கிலியைக் குறிக்கின்றது. இவ்வாறாகத் தொடர்பு என்பது முதலில் வெளிப்படக் காணும் உருவப் பருப்பொருள்களுக் குளதாகிய பற்றுதலைக் குறித்துப் பின் அகத்தில் நிகழும் அருவப் பொருள்களின் பற்றுதல் என்னும் உறவு, நட்பு என்னும் பொருளினும் வந்தது. (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 2-129)

பயர்

தொடலை: 'தொடலை’ தொழில் அடியாகப் பிறந்த தொடுக்கப்பட்டது தொடலை. ஐ செயப்படு பொருள் விகுதி. இச்சொல் மாலை என்னும் பொருட்டாதல் 'தொடலைக்குற்ற சிலபூவினரே' என்னும் ஐங்குறு நூற்றடி யானும் (நெய்தற் பத்து 7) தெளியப்படும். (திருவொற்றி முருகர்)

தொடி: தொடி, வளை முதலியவற்றிற்கு முன் அணிவது. வளைநெகிழா வகை முன்கையில் அணிவது.

ஆகலின்.

தொடு: தொடு

-

(ஐங்குறு. 196; 314. ஔவை. சு. து.) தொழு. ழகரம் டகரம் ஆகலும் உண்டு (கலி. 116. உரைவிளக்கம். இளவழ)

(யா. வி.1.)

தொடை: அடி இரண்டு தொடுத்தல் முதலாயின தொடையே.

தொண்டர்: பிறருக்குத் தொண்டு - அடிமை வேலை - செய்வோர் எல்லாரும் தொண்டர் எனப்படுவர். ஆனால்