பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

அங்குசம் முளை வளைந்திருத்தலின் தோட்டி எனப்பட்டது. தொடு என்பதற்கு முதனிலை தொள்; இதனடியாகவே தொளை, தோள், துவள், தோணி, துணை, தூண், தொய்வு, தொன்னை, தோல், தொம்பை, தூம்பு, துலை, துரட்டு, துறட்டி, தொடு, தொடி, தோடு, தோண்டு, தொண்டு, தொண்டை தோண்டி என்னும் இவை முதலாய பல சொற்கள் தோன்றி யவாறு ஆய்ந்துணரப் புலனாம். (திருக்குறள். தண்ட. 24.)

தோப்பு: தொகுப்பு என்பது தோப்பு என்றாயிற்று.

(ஊரும் பேரும். 40.)

(2) மரங்கள் பெரும்பாலும் பட்டிக்காடுகளுக்குப் பக்கத்தே ரு தொகுப்பாக வைத்துப் பழைய நாட்களிலேயே பயிராக்கப் பட்டுள்ளன. இங்ஙனம் ஒரு தொகுப்பாக வைக்கப் பட்ட மரச்செறிவே தோப்பு என வழங்கப்படலாயிற்று. தொகுப்பு எனுஞ் சொல்லே தோப்பு எனத் திரிபுற்றது.

(இளைஞர்க்கான இன்றமிழ். 86) தோரணம்: மாவிலை பனங்குருத்து முதலியவற்றால் இயற்றுமொரு மாலை. அது மாலையினைக் கழிநட்டுக் கட்டுவர். (பெருங். இலாவாண. 1: 7. பெருமழை)

தோளி: மகளிர் விளையாட்டுள் ஒன்று. இது பல்வரிக் கூத்துள் ஒன்றாதலைச் சிலப்பதிகார அரங்கேற்று காதை உரையான் அறிக. தோளை வீசி ஆடுதலின் தோளி எனப் பட்டது... திருவாசகத்தில் கூறப்பட்ட தோணோக்கம் என்பதும் இதுவே போலும். (அகம். 344. வேங்கடவிளக்கு.)

தோற்பாவை: செய்து ஆட்டுவது.

தோற்பாவை என்றது தோலால் பாவை (சிலப். 3: 12. அடியார்)

தோன்றி: மலையாளத்தில் மழைக் காலத் தொடக்கத்தை உணர்த்தும் 'பூ' இதுவேயாகும். தான் தோன்றி என்ற தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் உணர்ந்தவர்கள் ‘மேல் தோன்றி' தோன்றி என்ற சொற்கள் தோன்றிய காரணத்தை நன்கு புரிந்து கொள்வர்.

(சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் 74.)