பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

நாவாய்: (1) நால்வாய் (யானை) - நாவாய். நால்வாய் போல் அசைவதால் கப்பல் நால்வாய் எனப்பட்டது (உவமை ஆகு பெயர்).

“நாவாய் - களிகள்போற் றூங்கும் கடற்சேர்ப்ப”

என்றார் முன்றுறை யரையனார்.

(ஒப்பியன் மொழிநூல். 155.)

(2) நால்வாய் > நாவாய்= யானைபோல் அசையும் கப்பல். "நாவாய், களிகள்போற் றூங்கும் கடற் சேர்ப்ப" என்பது பழமொழி. "வெளிலிளக்கும் களிறுபோலத், தீம் புகார்த் திரை முன்றுறைத், தூங்கு நாவாய்த் துவன்றிருக்கை” என்பது பட்டினப்பாலை. (புறநானூற்றுச் சொற்பொழிவுகள். 356.) நாழிகைக் கணக்கர்: கடிகையார், அவர் அரசனுக்குச் சென்ற நாழிகைக்குக் கவி சொல்லுவார்; “பூ மென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு காமன் திரியும், கருவூரா யாமங்கள், ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்றுபோய் நாழிகையும், ஒன்றுபோய் ஒன்றுபோய் ஒன்று” என நாழிகை வட்டில் இடுவாரும் என்ப. (சிலப். 5: 49, அடியார்.)

ம்

நான்மறை: நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் நான்மறை என்றார். (தொல். சிறப்புப் பாயிரம். நச்) நான்மாடக் கூடல்: நான்கு மாடம் கூடலின் நான்மாடக் கூடல் என்றாயிற்று; அவை திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர். இனிக் கன்னி, கரியமால், காளி, ஆலவாய் என்றுமாம். (கலி. 92. நச்.)

நானான்கு: நானான்கு என்பதே பண்டையோர் கொண் டது. நந்நான்கு என்பது இலக்கண நூல் ஆதரவற்ற பிற்கால வழக்கு. (தொல். பொருள். மெய்ப். 1. ச. சோ.)

நானிலம்: புலவர்கள் நில இயற்கை வகையால் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் எனத் தமிழகத்தை நான்கு வகையாகப் பிரித்தனர். தமிழகத்தை நான்கு நிலமாகக் கொண்டு ஆராய்ந்த கண்ணோட்டத்துடன் உலகத்தையும் நோக்கினர். ஆதலின் உலகத்தை ‘நானிலம்’ என அழைத்தனர்.

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 12.)

-