பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ப்

விளக்கமும் காட்டப் பெறாத நூல்களைக் கண்டும் அயர்வின்றித் தொடர்ந்தேன். பற்பல நூல்களைச் சொற்பொருள் விளக்கம் கருதிப் புரட்டிய காலையில் அப்பயன் காணாது வேறுபயன் வெளிப்படக் கண்டும் வியந்தேன். நோக்கத்தை வரையறுத்துக் கொண்டு நூலாய்தலின் பயன் நன்கு விளங்கியது. விளங்க விளங்க, ஒரு நூலை மீண்டும் மீண்டும் - திருப்பித் திருப்பிப் - பயில்வதால் மட்டும் பயன் இல்லை. புதுப்புது நோக்கங்களைப் படைத்துக் கொண்டு ஈடுபடின், அந்நூலும் புதுப்புது நலங் களைக் காட்டித் தானும் பொலிவடைந்து, கற்பவனுக்கும் ஒளி கூட்டுவது கண்கூடாயிற்று.

இந்நூலில் காட்டப் பெறும் சொற்களில் பெரும் பாலனவும் பொருளும், விளக்கமுங், கொண்டு திகழ்கின்றன; ஏதுவும், எடுத்துக்காட்டும் கொண்டு மிளிர்கின்றன; கருத்து வளர்ச்சியும் கால வளர்ச்சியின் தடமும் அமைந்து மின்னலிடு கின்றன; வேர்ச் சொல்லும், வேர்வழிச் சொல்லுங்கூட விளக்கு கின்றன! எங்கெங்கும் சுவைமிக்க விருந்தாகித் தமிழ்ச் சொற் களின் “உயர்வற உயர்ந்த" நிலையை வெளிப்படுத்துகின்றன! ஆம்! “காமம் செப்பவில்லை! கண்டது மொழி" ந்தேன்!

இற்றைக்கு இருபதுயாண்டுகளின் முன்னர்த் தொல்காப்பியப் பேராசிரியத்தில் என் உள்ளம் ஈடுபட்டது. அந்நாளில் அந்நூல் இத்தமிழகத் தெல்லையில் கிட்டாது ஈழத்தில் இருந்து தருவித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரிதிற் பெற்ற பொருள், ஆர்வத்திற்கும் உரியது என்பது வெளிப்படை. அன்றியும், அரிதில் அரிய வளனும் உடையதாக அஃது இருக்குமாயின் அதன் சிறப்பை உரைக்க வேண்டுவதில்லை. "மெய்ப்பாடு" என்னும் சொல் முதலாக அப் பேராசிரியர் தரும்சொற்பொருள் விளக்கம் “நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து” தமிழ்ச் சொற்களின் தனியுயர் மாண்பில் தோய்ந்து கிடக்கச் செய்தது. அன்றே சொற்பொருள் விளக்க வித்து என் நெஞ்சத்தில் ஊன்றப் பெற்றது.

-

பேராசிரியரின் சொற்பொருள் விளக்கத்தில் யான் பேருவகையுற்ற போழ்திலே, மற்றொரு துயர் என்னை நலிப்பதாயிற்று. எளிய இனிய - இயற்கையுடன் இயைந்த தண்டமிழ்ச் சொற்களையும், வெளிப்படையாக வேர்கண்டு விளக்கத் தக்க சொற்களையும், 'வட சொல்லே' என்று வரிந்து கட்டிக் கொண்டு உரையாசிரியர் சிலர் செப்பந்தவறித் தம் மனவொப்பம் ஒன்றே குறியாகி மொழிக் கேடு புரிந்ததையும்,

-