பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

175

(4) நிறை என்பது தனிவினைப்பெயர். நிறைவு, நிறைதல், நிறைய, நிறைந்த முதலிய வினைவிகற்பங்கள் எல்லாம் இதனடி யாகப் பிறக்கும். குறைக்கு மறுதலையான இந்நிறையும் வேறே, நிறு என்னும் பகுதியடியாகப் பிறந்த நிறை என்னும் பண்புப் பெயரும் வேறே. பிற்கூறிய நிறை ஆண்மைக் குணத்தின் ஒன்று. (திருக்குறள். தண்ட. 154.)

(5) ஐம்பொறிகளையும் அடக்குதல். (திருக்கோ. 31. பேரா.) (6) நிறை என்பது மறை பிறர் அறியாமை நெஞ்சினை நிறுத்தல்.

(தொல். பொருள். 273. பேரா.)

நிறை நில்லாமை: நிறை நில்லாமை யாவது பொறுத்தல் அருமையால் அந்நோய் புறத்தார்க்குப் புலனாதல்.

(திருக்கோ. 278. பேரா.)

நிறைமொழி: நிறைமொழி என்பது அருளிக் கூறினும் வெகுண்டு கூறினும் அவ்வப் பயன்களைப் பயந்தே விடும் மொழி.

(திருக். 29. பரி.)

நிறைவு: அறிவொடு கூடிய ஒழுக்கம். (திருக்கோ. 268.பேரா) நினைதல்: நினைதல் என்பது விருப்புற்று நினைத்தல்; 'நின்னை மிகவும் நினைத்தேன்' என்பது வழக்காதலின்.

(தொல். பொருள். 260. பேரா.)