பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

‘செற்றம்' என்று வழங்கப்படும். மாறுபட்டோர் ஆகிய மாற் றாரை, அது, செறுகின்ற நிலையை அடைந்து விடுகின்றது. (திருக்குறள் அறம். 128.)

பச்சிலை: எல்லாவற்றினும் பசுத் திருத்தலில் பச்சிலை

என்று பெயர் பெற்றது.

பசும்பதம்: புதிது வந்த அரிசியால் ஆக்கிய சோறு.

(முருகு. 190. நச்.)

(மறைமலை. பட். ஆரா. 93)

பட்டடை: பட்டுதல்

-

அடித்தல். பட்டுதற்கு அடை (திருக்குறள் மரபுரை. 821.)

பட்டடை.

பட்டி: (1) பட்டி போன்று வேண்டியவாறே ஒழுகலின் பட்டி என்றார். நோதக்க செய்யும் சிறுபட்டி (கலி - குறிஞ் - 15.) என்றார் பிறரும். (திருக். 1074. பரி.)

(2) மனையினின்றும் புறப்பட்டால் பட்டி புக்குப் பயிர் அழிக்கும் பட்டி மாட்டினை ஒத்தார். (திருக். 1074. காலிங்.)

(3) கட்டுப்பாடு இல்லாதவன். கட்டுப் பாடின்றித் திரியும் மாடுகளைப் பட்டி மாடு என்னும் வழக்கு இக்காலத்தும் (கலி. 51. விளக்கம். பெருமழை.)

உண்மை உணர்க.

பட்டோலைப் பெருமான்: பட்டோலைப் பெருமான் நாள் தோறும் நடப்பவற்றை நிகழ்ச்சிக் குறிப்பில் எழுதி வைப்போன். (முதற் குலோத்துங்க சோழன். 85.)

படப்பை: தம் பொருளாகிய ஆனிரைகட் குரிய உணவுப் பொருள்களைத் தொகுத்து வைத்தற்கும், தம் உணவுக்கு வேண் டிய காய்கறிகளைப் படைத்துக் கோடற்கும் மனைப்புறத்தே அமைத்துள்ள தோட்டக்கால் படப்பை எனப்படும். இக் காலத்தும் வைக்கோற் படப்பை என வழங்குவர். படப்பை, படைப்பை என்பதன் மரூஉ. (ஐங்குறு. 203. ஔவை. சு. து.)

படர்தல்: ஓரிடத்தில் கால்கொண்டு பலபக்கங்களிலும் ஒருசேரப் பரவிச் செல்லுதலே படர்தல் எனப்படும். கொடி படர்தலைக் கொண்டு இதனை அறியலாம்.

(குறிஞ்சிப்பாட்டு விளக்கம். 35.)

படலம்: வேற்றுமை உடைய பல பொருள்களால் தோற்றம் உடைத்தாகத் தொடர வைப்பது.

(யா. வி. பாயிரம்.)