பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிற்றல்.

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

189

பணியாமை: தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக் கண்ணே (திருக். 963. பரி.)

பதடி: பதடியாவது பதர். “பதடி பதரே பொல்லுமாகும்' என்பது பிங்கலம். உள்ளீடு இன்றி இலேசானதைப் பதர் என்ப. சீர்மை - கனம் ; பதர் - இலேசு. (திருக்குறள். தண்ட. 196.)

பதலை: பதலை என்றது ஒரு தலைமுகம் உடையதொரு தோற்கருவி. (புறம். 103. ப. உ.) பதுக்கை: (1) பாலைப்பரப்பிலே ஆறலை கள்வர் தம்மாற் கொல்லப்பட்டோர் உடலைக் லைக் கற்கொண்டு மூடிய கற்

குவியல்கள்.

(ஐங்குறு. 362. விளக்கம். பெருமழை.)

(2) ‘பதுக்கை' மறைப்பிடம்; பதுக்கி வைத்தலின் வந்த தொழிலாகுபெயர். வழிப்பறிகாரர் தம்மால் கொல்லப் பட்டார்மேற் கற்களைக் குவித்து அக்குவியல்மேல் தழைபெய்து மூடிவைக்கும் உண்மை.

"செந்தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்புபட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை

என்னும் புறநானூற்றினாலும் (3) பெறப்படும்.

(திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 88)

பம்பை: பம்பம் என்று ஒலிப்பது பம்பை. (தமிழர் வீரம். 16.) பயிர்ப்பு: பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு.

(திருக்கோ. 12. பேரா. இறையனார். 2. நச்.) பயிற்றல்: பலகால் சொல்லல். (அகம். 6. வேங்கட விளக்கு.) பரந்தமை: அயலாந்தன்மை. தன்னின்வேறாய் ஒழுகுந் (நற்றிணை. 280. அ. நாராயண.)

தன்மை.

பரத்தன்: பரத்தையை நுகர்வானும் பரத்தன்.

.

(சிலப். 16.63. அடியார்.) பரத்தை: (1) ஆடவர் பலர்பால் பரந்து சென்று ஒழுகியவர் பரத்தையர் எனப்பட்டனர். (ஐங்குறு - பதிப்புரை- 21. ஒளவை. சு)

(2) பரத்தையராவர் யாரெனின் ஆடலும் பாடலும் வல்லராகி அழகும் இளமையும் காட்டி, இன்பமும் பொருளும் வெஃகி, ஒருவர் மாட்டும் தங்காதார்.

(தொல். 149. இளம்பூரணர்.)