பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

பழம் என்ற கிளவி ‘பழு' என்ற முளையால் தோன்றுவ தாகலின் பண்டு என்பதிலும் ‘பழு' என்பதே முளையாகும் எனல் பொருந்தும். இஃது எங்ஙனம் ஆகும் என்பதைக் காண்போம்.

‘ழ’கரத்தை வாயிற் கூட்டுவது எவருக்குஞ் சிறிது அரிது. இதனால் கல்லார் பலவாறு அதைத் திரித்து வழங்குவர். தமிழ் நாட்டின் தென்பகுதியில் அது ‘ௗ’கரமாகும். வடபாதியில் 'ய'கரமாகும். மேல் நாட்டார் அவ்வெழுத்தை அமைக்க முயல் வது நகைச் சுவைக்கு இடம் தரும். தெலுங்கில் ‘ழ’கரம் கரமாய் மாறும்; சிறுபான்மை வேறு எழுத்துக்களாயத் திரிவதும் உண்டு. கோழி, ஏழு, இழு, கழுவு, என்ற தமிழ்மொழிகள் முறையே கோடி, ஏடு, ஈடு, கடுகு என வருதல் காண்க. இவ்வாறு பழு' என்பது ‘படு’ என நின்று, பின் ‘ட’கரத்திற்கு இனமாகிய ‘ண’கரத்தை இடையில் ஒற்றாய்ப் பெற்றுப் பண்டு என்றாகி இருக்க வேண்டும். இதற்குப் பிற சான்றுமுண்டு. படுத்துக்கொள் என்பதைத் தெலுங்கில் ‘பண்டுகோ' என்பர். இதில் ‘படு’ என்பது பண்டு என நிற்றல் கருதத்தக்கது. அன்றியும், 'கூடு', ‘பூடு' என்ற தமிழ்மொழிகள் இடையில் ணகரத்தைப் பெற்றுக் ‘கூண்டு’, ‘பூண்டு' என வருதலும் இவ்வாராய்ச்சிக்கு இயைபுடையதே.

(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 89-90)

-

பழுத்தல்: பழுத்தல் - முற்றல். பழமை முற்றிய தன்மை. பண்டு - முற்றிய அல்லது இறந்த பொழுது. பழு என்பது இறந்த காலத்தைக் காட்டும் என்பதைப் பழுமரம் தொன்மரம் என்பன ஒரு பொருளனவாய் ஆலமரத்தைக் குறிப்பதால் அறிக. ஒரு நாள் அட்ட உணவு மறுநாள் இருந்தால் அதைப் பழயது என்று நாம் சொல்வதும் மேற் குறித்ததையே வற்புறுத்தும். பழம் முற்றியது; நிறைவடைந்தது. தமிழ் ழகரம் நாக்கில் வராமையால் ‘பழம்' என்பதை ‘பலம்' என்பாரும் உளர். பழமொழி என்பதை முன்னாள் மொழி என்றாவது, முதிர்ந்து நிறைந்த மொழி என்றாவது பொருள் படுத்தலாம். இரண்டும் கூடியே பொது வாய்ப் பழமொழிகள் ஏற்படும். வீட்டில் ஆடுகின்ற (சொக்கட் டான்) ஆட்டங்களில் 'பழம் பழுத்தல்' என்பது ஆட்டம் நிறைவு பெறுதலைக் காட்டும். எதாவது ஒன்று முடிந்ததோ இல்லையோ என்பதை வழக்கத்தில் காயா? பழமா? என்று கேட்கிறோம். பழுக்கா அல்லது பழுக்கை என்பது பொன் னிறத்திற்கு ஒரு பெயர். இந்நிறம் பழுத்தலாகிய நிகழ்ச்சி யாலாவது கண்டு அப்பெயர் பெற்றது போலும். பழுப்பு என்ற சொல்லும் இத்தகையதே. மஞ்சள் நிறத்தைத் தெலுங்கர் 'பசப்பு'

L

-