பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

195

என்று சொல்வர். இது பழுப்பு என்பதுடன் ஒற்றுமை யுடையதே. 'மேனி பசத்தல்' என்பதை ஒப்பிடுக.

பழகல் - அறிமுகம், முதிர்தல், பயிலல். முதிர்ந்து நிலை பெற்ற நட்பை நிறைமொழி வள்ளலாகிய வள்ளுவர் பழைமை என்று இனிதாய்ச் சொல்வர். பழக்கம் - இணக்கம். தென்னாட்டு மக்கள், பழக்கம் என்பதை ஓர் அரிய பொருளில் வழங்கு கிறார்கள். “நான் நேற்று அவனுடன் பழக்கமிட்டுக் கொண் டிருந்தேன்” என்று பேசுவதைத் திருநெல்வேலியில் பல இடங் களில் பெரும்பான்மையும் கேட்கலாம். பழக்கமிடுதல் - பேசுதல். பாட்டுக்களால் அமைந்த நந்தனார் வரலாற்றின்கண் ஒரு நொண்டிச் சிந்தில் "சேரியில், வழக்கமில்லாதபடி பழக்க மிட்டான்” என்று வருகிறது. இப்பொருள் மிகவும் அருமை யானது. ஏனெனில், பேச்சென்பது பழக்கத்தினாலாகிய ஒன்றே என்ற உண்மையைத் தமிழர் தொன்று தொட்டு அறிந்தவர்கள் என்று இதனால் அறியலாகிறது.

கூறுதல்.

(மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 90-91.)

பழைமை: (1) பழைமையாவது நட்டோரது உரிமை (திருக். பழைமை. மணக்; பரிப்.) (2) பழைமையாவது காலஞ் சென்றது அன்று ; இப் பெற்றித்தாய நட்பு என்பது கூறப்பட்டது. ய (திருக். 801. பரி.)

(3) அஃதாவது பழைய ராம்தன்மை பற்றி அவர் பிழைத் தன பொறுத்தல். காரணப் பெயர் காரியத்திற்கு ஆயிற்று.

(திருக். பழைமை. பரி.)

பள்ளிச்சந்தம்: சமண பௌத்த கோயில்களுக்க விடப் பட்ட இறையிலி நிலங்கள் பள்ளிச்சந்தம் எனப்படும்.

(பிற்காலச் சோழர் சரித்திரம். I. 136.)

பள்ளிப்படை: அரசனது சமாதிக் கோயில் பள்ளிப்படை என்று அக்காலத்தில் (சோழர் காலத்தில்) வழங்கப்பட்டது.

(பிற்காலச் சோழர் சரித்திரம். I. 37.)

பற்று: இசையில் இன்பத்தையும் பாடுவோர்க்கு நலனை யும் பயக்கும் அவ்வொலியை அவர்கள் சதா பற்றிக் கொண்டே இருத்தலால்தான் நம்மூதாதையர் அதனைப் ‘பற்று' என்றே வழங்கினர். நாம் நடைமுறையில் அவ்வொலியைச் ‘சுதி' என்ற வடமொழிப் பெயரால் வழங்குகிறோம். (பாணர் கைவழி. 21.)