பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

201

அப்பூதியடிகளாரின் மூத்த திருமகன் நாகந்தீண்டி இறந்தபோது திருநாவுக்கரசு நாயனார் பாம்பின் விடத்தை நீங்கும்படி செய் தார். சேக்கிழார், “பாவிசைப் பதிகம் பாடிப் பணிவிடம் பாற்று வித்தார்” எனப் பாடினார். இங்குப் பால் என்ற சொல்லைச் சேக்கிழார் வினைச்சொல்லாகப் பயன்படுத்தியுள்ளார். விடம் பாற்றுவித்தார் என்பது நஞ்சைப் பிரியும்படி செய்தார் எனும் பொருள் கொண்டது. செல்வம் தேடுதல் முதலிய காரணமாகத் தலைவன் பிரிவது பாலைத்திணை ஆயிற்று.

(கட்டுரை. அகத்திணைத் தெளிவு.)

பாவினம்: (1) ஒருபுடையாற் பாவினோடு ஒத்த இனத் தவாய் நடத்தலின் பாவினம் என்பதூஉம் காரணக் குறி.

(யா. வி.54.)

(2) தாழிசை: ஒருபுடையால் தத்தம் பாவினோடு ஒத்த தாழத்தால் இசைத்தலானும் ஒத்த பொருள்மேல் பெரும் பான்மையும் மூன்றாய்த் தாழ்ந்து இசைத்தலானும் தாழிசை என்பதூஉம் காரணக் குறி.

துறை: ஒரு புடையால் தத்தம் பாவிற்குத் துறை போன்று நெறிப்பாடு உடைத்தாய்க் கிடத்தலானும் எல்லாத் துறை மேலும் இனிது நடத்தலானும் துறை என்பதூஉம் காரணக்குறி. விருத்தம்: ஒரு புடையால் தத்தம் பாவினோடு ஒத்த ஒழுக்கத்தாகலானும், எல்லா அடியும் ஒத்து நடத்தலானும் புராணம் முதலாகிய விருத்தம் உரைத்தலானும் விருத்தம் என்பதூஉம் காரணக் குறி. (யா. வி. 56.)

பாவை: (1) இஞ்சிக் கிழங்கைப் பாவை என்றல் மரபு.

(மலைபடு. 125. நச்)

(2) அறுகு, இஞ்சி முதலியவற்றின் கிழங்கைப் பாவை என்றல் மரபு. 'செய்யாப் பாவை' என்புழி, இஞ்சிக் கிழங்கைப் பாவை என்றல் மரபென மரபென நச்சினார்க்கினியர் கூறியதும்

காண்க.

(மலைபடு. 125.)

(அகம். 23. வேங்கட விளக்கு.)

பாவை நோன்பு: (பாவையைக்) குழமகள் என்கின்றார் நச்சினார்க்கினியர். நீலகேசி ஆசிரியர் ‘குழமணர்’ என்றும் இப்பாவைக்குக் கை கால் முதலியன இரா என்றும் ஓதுவர்.