பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

(நீலகேசி. 408.) எனவே ஒரு மரக்கட்டையைக் குழந்தையாகப் பாவனை செய்தல் என்றுணர்க. இக் காரணத்தால் இந்த நோன்பு ‘பாவை நோன்பு' எனப் பெயர் பெற்றது.

பானாள்:

(கலி. 59. விளக்கம். பெருமழை.)

உரை

‘பானாள்’ (பால்+நாள்) என்பது நள்ளிரவு அல்லது நண்பகல் என்று பொருள்படும். பண்டை யாசிரியர்கள் பானாள் வருமிட மெல்லாம் நள்ளிரவு என்று மட்டுமே பொருள் கொண்டனர். குறுந்தொகை 311 ஆம் பாட்டு, பானாளில் தலைவியும் ஆயமும் புன்னைமலர் கொய்வதைக் குறிக்கின்றது. ஆயம் பூக்கொய்தல் நள்ளிரவில் நிகழ்வதன்று. புன்னைமலர் கொய்தல் நண்பகலில் ‘உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து' அண்மையில் நிகழ்வதைக் குறிஞ்சிப் பாட்டும் குறிக்கும். அங்கு ஆயம் கொய்த மலர்களில் ‘கடிஇரும் புன்னை'யும் காணலாம். குறுந்தொகை 219 ஆம் பாட்டு, சிறுவெண் காக்கை பானாளில் ‘பனிக்கழி துழவுதல் குறிக்கும். ச் செயலும் நண்பகலில் நிகழ்வதென்பதே பொருந்தும். இப் பாட்டிலும் (கூதிர்ப்பானாள்” - நெடுநல் வாடை - 12) நண்பகல் என்னும் பொருள் பொருந்துவது காண்க.

(நெடுநல்வாடை. பா நலன். 163.)