பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

205

ஆனால் பொருள் தெளிவாய்த் தோன்றவில்லை. 'பிழைத்துக் கொண்டான்' என்றால் தப்பித்துக் கொண்டான் என்பதுவே கருத்து. "நிலத்தறைந்தான் கைபிழையாதற்று” “பிழையா விளையுள்” என வருதல் காண்க. ஆனால், பிழைப்பு, பிழைத்தல் என்ற சொற்களை நாம் ஆளும்போது வாழ்தல் என்ற எண்ணம் ஒன்றே நமக்குளது. இது பழக்கத்தின் பயன்.

பாரிற் பிறந்து வாழும் உயிர்களுக்கு நேரிடும் இன்னல் களுக்கும் டையூறுகளுக்கும் கணக்கில்லை; உயிர்களை அழிக்கக் காத்திருக்கும் வல்வினைகளுக்கு அளவே இல்லை. பகை, பசி, பிணி முதலியவற்றிற்கு நாடோறும் அவை இரை யாய்ப் போகின்றன. இவற்றிற்கு எஞ்சி நிற்பவையே வாழ்வன. இவற்றிற்குத் தப்புவதே பிழைப்பு...... ஆதலின் சாவினின்றுந் தவறி நிற்றலே வாழ்க்கையாகும். மாண்டொழியாது தப்புதலே உயிருடனிருத்தல். தவறு, தப்பு, பிழை என்பன ஒருபொருட் பன்மொழி. (மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள். 83-84) பிறங்கல்: விளக்கம்; பிறங்கு கல், பிறங்கலென விகாரம். (அகம். 13. ப. உரை.)