பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6

-

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ஆதலால் மரணத்தைத் தடுப்பதற்கு வடமொழியில் ‘அமிருத’ எனப் பெயராகி, அப் பெயரே தமிழில் அமிழ்தம் எனத் திரிந்து வழங்குகிறது என்பர். அது நிற்க. அமிழ்தம் மரணநோயைத் தீர்த்தலினாலே மருந்து எனவும், உண்ணப்படுதலின் உணவு எனவும், இன்சுவைத்தாதலின் இனியது எனவும் கொள்ளப்படு கின்றது. இம் மூவகைப் பண்புகளும் அதற்குளவாதல் ‘விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா, மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’ (குறள்.82) ‘அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள், சிறுகை அளாவிய கூழ்' (குறள்.64) என்னும் குறள்களிலே நன்குணரக் கிடக்கின்றது. அமிழ்தம் என்னும் சொல்லொடு ஒற்றுமையுடைய அவிழ்தம், அவிழ், தமிழ் என்னும் தூய தமிழ்ச் சொற்கள் மூன்றும் அம்முப் பண்புகளையும் முறையே உணர்த்துவனவாம். நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக் கட்டை அகற்றுவது அஃதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அஃதாவது மருந்து; மகரமும் வகரமும் ஒத்து நடப்பதுண்டு, 'மிஞ்சுதல் - விஞ்சுதல்', 'மேய்தல் - வேய்தல்' ‘மீறுதல் வீறுதல்' என்பவற்றிற்போல; அவ்வாறே ஈண்டும் அவிழ்தம் என்பதும் அமிழ்தம் என்றாயது. இனி, அவிழ் என்னும் சொல் உணவுப் பொருளாகிய சோற்றைக் குறித்தல் குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி' (மலைபடுகடாம்.183) என்னும் பத்துப் பாட்டடிலும், பிறாண்டும் காணலாகும். இச் சொல் வகரம் மகரமாகி விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. அமிழ்தம் என்பதின் திரிபாகிய அமுது என்பது உணவைக் குறித்தல் பெருவரவிற்றாதலும் உணர்க. இனி, தமிழ் என்பது னிமைப் பொருட்டாதல் சிந்தாமணி முதலிய நூல்களில் காணலாம். மலர் - அலர், தாய் - ஆய், புலர் - உலர் என்பவற்றிற் போல மொழி முதல் ஒற்றொழிந்து தமிழ்ச் சொற்கள் உண்டாதலால் இனிமை என்னும் பொருட்டாய தமிழ், மொழிமுதல் ஒற்றொழிந்து அமிழ் என்றாய் விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. இவ்வாறு அமிழ்தம் என்னும் சொல் தனக்குரிய முப்பண்புகளையும் தமிழ்ச் சொற்களால் தானே காட்டி நின்றதாகலின் அதனை வடமொழித் திரிபென்பதினும் தமிழ்ச் சொல்லே எனக் கொண்டு வடமொழி அமிர்தம் இத் தமிழ்ச் சொல்லின் திரிபெனக் கோட பொருத்தமுடைத்தாம்’ என்று

-ஆய்,

நாகை சொ.தண்ட பாணிப் பிள்ளை அவர்கள் தருக்கமென்னும் தகவுடைய சம்மட்டி கொண்டு பொருளையே அன்றிப் பொருள் வைக்கப்பெற்ற பட்டடையையும் சேர நையச் செய்த வல்லாண்மை எண்ணி இன்புறுவதுடன், தொடர்ந்து