பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

219

பொலம்: பொன் பொலிவு ஆதல் அன்றிப் பொலம் பொலிவு ஆகாது. (சிலப். 10: 21. அடியார்.)

பொழில்: மாந்தன் தோன்று முன்பும் மக்கள் பெருகு முன்பும் ஞாலத்திலுள்ள நிலமெல்லாம் மரஞ் செடி கொடி படர்ந்து ஒரே சோலையாய்த் தோன்றிற்று. பெருநிலப் பகுதி களும் சிறுநிலப் பகுதிகளும் தனித்தனி பெருஞ் சோலையும் சிறு சோலையுமாக விருந்தன. இதனால், மண்ணுலகமும் அதன் கண்டங்களும் நாடுகளும் 'பொழில்' என்னும் பொதுப்பெயர் பெற்றன. பொழில் என்பது சோலை; பொழிதல் திரளுதல்; பொழித்தல் திரட்டுதல். மரங்களின் பொழிப்பு அல்லது தொகுப்பு பொழில். ஒரு பாட்டின் சொற்பொருளைத் தொகுத்துக் கூறும் உரையைப் பொழிப்புரை யென்றல் காண்க. “தொழில் காவல் மலிந்தியலும்

பொழில் காவலன் புகழ் விளம்பின்று”

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவில் (சா. சா) பொழில் என்பது ஞாலத்தை (பூமியை)க் குறித்தது.

“நாவலந் தண்பொழில் நண்ணார் நடுக்குற'

என்னும் மணிமேகலை யடியில் (உஉ. உகூ) பொழில் என்பது (இந்து) தேயத்தைக் குறித்தது.

66

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்

என்னும் தொல்காப்பிய அடியில் (செய்யுளியல், எகூ) அச் சொல் (தமிழ்) நாட்டைக் குறித்தது.

பரதகண்ட மெனப்படும் இந்து தேயம், பழங்காலத்தில் நாவல் மரத்தாற் சிறப்புற்றிருந்தமையால் நாவலம் பொழில் எனப்பட்டது. ஒரு காலத்தில் குமரிமலை முதல் பனிமலை (இமயம்) வரையும் முத்தமிழ் வேந்தர் ஆட்சி செலுத்தி யமையால், நாவலந் தண்பொழிற்க மூவர் தண்பொழில் என்றும் பெயர். பிற்காலத்தில் தமிழ் வழக்கும் தமிழாட்சியும் தெற்கே ஒடுங்கிவர, “மூவர் தண்பொழில்” என்பது தென்னாட்டை அல்லது தமிழ் நாட்டை மட்டும் குறித்தது.

(சொல். கட். 17.)

பொறாமை: பொறாமை என்பது அழுக்காறு; அஃதாவது, பிறர் செல்வங் கண்ட வழி வேண்டாது இருத்தல்.

(தொல். பொருள். 260. பேரா.)