பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ் வளம் – 3 3

பொறியறை: பொறியறை- பொறியற்றது. காதறை மூக்கறை (தொல். சொல். 56. சி. கணேச)

என்பனவும் அன்ன.

(1) பொறை எனப்படுவது போற்றாரைப்

பொறை:

பொறுத்தல்.

(2) பொத்தை மலை; சிறுமலை.

(கலி. 133)

(சிலப். 11:68 அரும்பத.)

(3) பொறையைப் பொத்தை என்பாரும் உளர். ஆவது; மட்சிறுமலை. (சிலப். 11: 68. அடியார்.)

பொறையன்: பொறையன் என்பதைச் சேரர்குடி அல்லது குடும்பத்தின் ஒரு பகுதிக்கு அரசனாயிருந்தவனின் பெயராகக் கொள்ளலாம். பொறை என்பது பாறை அல்லது பொற்றை அல்லது குன்று என்று பொருள்படும். எனவே பொறையர் என்ற சொல் மலையும் குன்றும் நிறைந்த மலைநாட்டில் வாழும் மக்களையும் மன்னர்களையும் குறிக்கும்.

(சங்ககால இலக்கியச் சிறப்புப் பெயர்கள். 235.) பொறையுடைமை: (1) பொறையுடைமையாவது பிறர் செய்த குற்றம் பொறுத்தல். (திருக். பொறையுடைமை. பரிதி.)

(2) பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய் தாரைத் தாமும் துன்பம் செய்யாது அவர்மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல். (திருக். பொறையுடைமை. மணக்.)

(3) அஃதாவது காரணம் பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தமக்கு மிகை செய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலை உடையர் ஆதல்.

(திருக். பொறையுடைமை. பரி.)

(4) பொறை என்னும் விரதத்தையே தமக்கு உறுதியாகக் கொள்ளுதல். மெய், வாய், கண், மூக்கு, செவிகளுக்கு இத மானவை ஒழிந்து பிறிதொன்றினால் அந்தப் புலன்களுக்குத் தகாத குற்றங்கள் வந்ததாகில் பூவுக்கு மணமும் கரும்புக்கு இரசமும் போலப் பாவிக்கப்படாமற் சுபாவமாகப் படிமம் போல் இருத்தலும் விரதத்துக்கு இடையூறாகிய பசி தண்ணீர்த் தாகத்தைப் பொறுத்தலுமாம். (நாலடி. பொறையுடைமை. விள. உ.)