பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

இளங்குமரனார் தமிழ் வளம் - 3

LOIT

மா: மா வென்பன விலங்கு.

(தொல். பொருள். 587.பேரா.)

மாக்கள்: (1) மக்கட்குரிய மனன் இன்றி அறிவு கெட்டமை யின் ஐயறிவுடையர் என்று ‘மாக்கள்’ என்றார். (சீவக. 1278. நச்.)

(2) மாக்கள் எனப் படுவார் மன உணர்ச்சி இல்லாதார்.

(தொல். பொருள். 587. பேரா.)

(3) மா என்பது விலங்கு; மாக்கள் என்றது, அவ்விலங்குப் பிறப்பினும் உயர்ந்து ஏனை மக்கட் பிறப்பில் தாழ்ந்து அவ் விரண்டின் நடுவணதாய் அவற்றிற்கு வேறானதொரு பிறப்பாம். இப் பிறவியுட்படும் மாக்கள் என்னும் உயிர்கள் விலங்கின் உருவமும் மக்கள் உருவமும் கலந்ததோர் உருவத்தை உடைய வாய் இருக்கும் என்ப. இங்ஙனமொரு படைப்பு விலங்குப் பிறப்பிற்கும் மக்கட் பிறப்பிற்கும் இடையே ஆண்டவனால் படைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென இக் காலத்து உயிர் நூல் வல்லாரும் உய்த்துணர்ந்து அங்ஙனம் உணர்ந்தவாறே இருப்பதொரு படைப்பினை ஆத்திரேலியா" என்னும் நாட்டில் நேரில் கண்டு, தமது துணிபினை மெய்ப் படுத்துவ ராயினர். இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டு கட்கு முன்னரே நம் முதுதமிழ்ப் பேராசிரியராய் விளங்கிய தொல்காப்பியனார் இவ்வுண்மையை நன்கு தெளிந்து, அவ் வினத்தவராம் உயிர்கட்கு ஐந்து அறிவுகள் உண்டு என அறிவு வரையறை காட்டி “மாவும் மாக்களும் ஐயறி வினவே” (மரபியல் 32) எனத் தமது அரும் பெறல் நூலில் நூற்பா யாத்து உரைத்தது பெரிதும் நினைவு கூர்ந்து மகிழற்பாலதாகும்.

66

(திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை. 127-128)

மாட்டி: மூள்வித்தற்கண் மூட்டி என நின்றவாறு போல மாள்வித்தற்கண் மாட்டி என நின்றது. (திருக்கோ. 284. பேரா.)

மாட்டு: மாட்டு என்பது, பல்வேறு பொருள் பரப்பிற்று ஆயினும், அன்று ஆயினும் நின்றதனோடு வந்ததனை ஒரு தொடர் கொளீஇ முடித்துக் கொள்ளச் செய்தல்.

(தொல். பொருள். 313. பேரா.)