பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

மாப்பிள்ளை: மாப்பிள்ளை என்று வழங்கும் தொடர் மணம் பிள்ளை என்னும் இரு சொற்களால் ஆகியது. மணம்+ பிள்ளை= மணப்பிள்ளை. மகாநாடு என்பது மாநாடு என வழங்கப்படுதல் போல மணப்பிள்ளை மாப்பிள்ளை என்று மருவி வழங்கப்படுகிறது. (தமிழ்மொழிச் செல்வம். 88.) மாமை: மாந்தளிரின் தன்மை. (ஐங்குறு. 134. ஔவை. சு.து.) மாயோள்: (1) வெளிறித் தளுக்காக மிளிருங் கரியநிறம் (மறைமலை. முல்லை ஆரா. 66) (2) மாயோள்- மாமை நிறத்தை உடையவள் மாமை நிறம் என்பது மாந்தளிர் போன்ற அழகிய நிறம்.

உடையவள்.

(குறுந்தொகை. 9. உ. வே. சா.)

மாலை: ண்டை - தண்ட வடிவமாகத் தொடுத்த மாலை.

தொடை

=

சதுரமாகத் தொடுத்த மாலை.

தாமம் - கோத்த மாலை.

கண்ணி - வட்ட வடிவமாகத் தொடுத்த மாலை.

தாடை - தொடுக்கப்படுவது ; மாலை.

(திருவிளை. தருமிக்குப பொறிகிழி. 6. ந. மு. வே.)

மாற்றம்: மாற்றம் என்றால் சொல். வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, ‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் என்றார் மாணிக்க வாசகர். மாற்றம் என்பது தமிழிலே ஏட்டு வழக்கில் உண்டு. நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே ‘மாட்ட” என்பது பெருவழக்காக உள்ளது. (தமிழ் விருந்து. 92..) மானம்பு: புரட்டாதித் திங்களில் குழந்தைகள் அம் பெடுத்து வாழை மரத்தைக் குத்தும் விழா இன்றும் நடை பெறுகின்றது. மானம்பு (மகார் நோன்பு என்பதன் மரூஉ) என்றும் கிலுகிலுப்பை எடுத்தல் என்றும் இவ் விழாவினை அழைக்கின்றனர். (தொல்காப்பியப் புதுமை. 78.)