பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

233

மி

மிகை: மிகை என்பது, கல்லாமையும், செல்வமும், இளமை யும் முதலாக வரும் உள்ள மிகுதி. (தொல். பொருள். 260. பேரா.) து

L

மிச்சில்: மிகுந்தது மிச்சில்; இது மிச்சம் எனவும் வரும். இப்பொருள்பட வரும் பிறிதொரு சொல் எச்சம்; எஞ்சியது, எச்சம். எஞ்சுதல் - குறைதல். மிகுதல் குறைதல் என்னும் நேர் மாறான இருவினைகள் ஒரே பொருளைக் குறித்தல் இரு வேறு வகைப்பட்ட கருத்து நோக்கத்தால். வேண்டும் அளவு போக அவ்வளவிற்கு மிகையாய் நின்றது மிச்சம் அல்லது மிச்சில்; மிகுதியுமாம். உள்ள பொருளில் கொள்வது கொள்ளக் குறைந்தது எச்சம் அல்லது எச்சில். மிச்சில் என்பது கொள்ளப்ட்ட பகுதி நோக்கி நின்றது. எச்சில் என்பது முழுப் பொருளை நோக்கி நின்றது. (திருக்குறள். தண்ட. 85.)

மிசை: மிசை - உணவு. மிசையப் படுதலின் உணவிற்கு மிசை (ஐங்குறு. 81. விளக்கம். பெருமழை.)

என்பது பெயராயிற்று.

IDN: Iஞிறு (வண்டு) என்பது DIறு என்றாயிற்று.

(அகம். 78. வேங்கட விளக்கு.)

மிலேச்சர்: ஆரியர், பெலுச்சிதானத்தினின்று வந்த துருக்கர்; பெலுச்சி என்பது மிலேச்சர் எனத் திரிந்தது; பெலுச்சி தானத்தின் வழியாகப் பரத நாட்டினுட் புகுந்தமை பற்றியே பண்டைக் காலத்தில் ஆரியர் தமிழரால் மிலேச்சர் என அழைக்கப்பட்டனர். திவாகரத்திலும் ‘மிலேச்சர் ஆரியர்' எனப் போந்தமை காண்க. (மறைமலை. முல்லை. ஆரா. 73)

மிளகு: மிள - கார்ப்பு. கு - பண்புப் பெயர் விகுதி. மிள - காரம். மிளகாய் மிளப்பு (கிராம்பு) மிளகரணை (கார்க்கின்ற அரணைப் பூண்டு)

-

வடமொழியார் - ம்ருங் பிராணத்யாகே, ருங் என்ற பகுதி உயிர் விடுதல் (சாதல்) பொருளில் வரும். நாவின் நுனி இதனால் பாதிக்கப்படுகிறது என்று (மிரியதே) சாதல் என்ற பொருளுடைய