பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

237

முத்து: முத்து என்பது, தமிழில் சிறிதாய் உருண்டு திரண் டிருக்கும் பல்வேறு பொருள்களைக் குறிக்கும்.

(1) கிளிஞ்சலில் விளையும் மணி வகை. “முறிமேனி முத்தம் முறுவல்”.

(2) உருண்டு திரண்ட விதை. எ-டு; ஆமணக்கு விதை.

(3) உருண்டு திரண்ட ஆட்டக்காய்.

(4) பெரியம்மைக் கொப்புளம்.

(5) கண்ணீர்த் துளி “பருமுத்துறையும்’

(சீவக. 1318)

(6) பனிநீர்த் துளி. “முத்துநீர்ச் சாந்தடைந்த மூஉய்”. (பரிபா. 10,13) உருண்டு திரண்டிருக்கும் எண்ணெயுள்ள விதைகள் முத்தென்றே பெயர் பெற்றுள்ளன.

எ-டு: ஆமணக்கு முத்து (முத்துக் கொட்டை, கொட்டை முத்து) குருக்கு முத்து, வேப்ப முத்து.

முத்துச் சம்பா, முத்துச் சோளம் என்பன உருண்டு திரண்டு முத்துப்போலிருப்பன. உருண்டு திரண்டுள்ள கோரைக் கிழங்கு முத்துக் காசு எனப்படுகிறது.

முத்து பெரிதாயிருப்பின் முத்தம் எனப்படும். அம் என்பது ஒரு பெருமைப் பொருள் ஈறு.

ஒ. நோ : மதி = நிலா. மதியம் :

= முழுநிலா. நிலை = தேர் நிலைபோற் சிறிய இடம். நிலையம்

=

புகைவண்டி நிலையம் பெரிய

விளக்கு: வீட்டு விளக்குப் போல் சிறியது.

டம்.

விளக்கம்; கலங்கரை விளக்கம்போற் பெரியது.

(தமிழ் வரலாறு. 16.17.)

முதுகண்: முதுகண் என்பது தமது நெருங்கிய கிளைஞரா யுள்ள இளைஞர்க்கும் பெண்டிர்க்கும் அவர்கள் பொருள் களுக்கும் பாதுகாவலாக நிலவிய ஆண்டில் முதிர்ந்த ஆண் மக்கட்குரிய பெயராக முற்காலத்தில் வழங்கியுள்ளது என்பது கல்வெட்டுக்களால் தெரிகிறது. இதனை “இச் சுந்தர பட்டனையே முதுகண்ணாக வுடைய இப் பொன்னார்மேனி பட்டன் மாதா உமையாண்டாளும்” (S. I. I. vol. v. No. 649.)