பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொற்பொருள் நுண்மைவிளக்கம்

241

இந்த எறியூசி போன்ற எய்களை உடலில் நிறைய உடையதால் எய்மான் என்றழைக்கப்பெற்றது.

(சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 402.) முறை: (1) அண்ணன் அம்மான் என்றாற்போல்வன முறை. (மலைபடு. 185. நச்.)

(2) முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்.

(கலி. 133)

முன்தேற்று: (1) தெய்வத்தின் முன்னிலையிற் சூளுறவு செய்து தம் உள்ளத்துறுதியைப் பிறர்க்குத் தெளிவுபடுத்தும் உலகியல் வழக்கினை ‘முன்தேற்று' (சொல். 383) என்ற சொல் லால் ஆசிரியர் (தொல்காப்பியர்) குறிப்பிடுகின்றார்.

(தமிழிலக்கிய வரலாறு. தொல்காப்பியம். 142.)

(2) தெய்வத்தின் முன்நின்று சத்தியம் செய்து தெளிதல். (தொல். சொல். 383. சி. கணேச.)

து

முன்றுறை: துறைமுகம். இது துறைமுன் எனற்பாலது முன்றுறை என முன்பின்னாக மாறி நின்றது.

(ஐங்குறு. 185. விளக்கம். பெருமழை.)

முன்னம்: முன்னம் என்பது, உயர்ந்தோரும் இழிந்தோரும் ஒத்தோரும் தத்தம் வகையான் ஒப்பச் சொல்லுதற்குக் கருத்துப் படச் செய்தல். (தொல். பொருள். 313. பேரா.)

முன்னீர்: முற்பட்ட நீர்மை; அஃதாவது 'உதிரம் உற வறியும்' என்னும் பழமொழி. (சீவக. 1910. நச்)

முனிதல்: முனிதல் என்பது வெறுத்தல். அஃது அருளும் சினமும் இன்றி இடைநிகர்த்ததாதல். (தொல். பொருள். 260. பேரா.)